புனித தாமஸ் பேராலயம், பாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித தாமஸ் பேராலயம், பாலா

புனித தாமஸ் பேராலயம் (St Thomas Cathedral)[1] அல்லது வெறுமனே பாலா பேராலயம் என்பது கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான ஒரு தேவாலயம் ஆகும் இது சிரோ-மலபார் மரபுவழியைப் பின்பற்றுகிறது. இது இந்தியாவின், கேரளா மாநிலத்தின், கோட்டயம் மாவட்டத்தில், பாலா நகரில் அமைந்துள்ளது. இது சிரோ-மலபார் மறைமாவட்டத்தின் தாய் தேவாலயமாக, 1950 இல் பன்னிரண்டாம் பயசின் "குவோ எக்லெசியாரம்" மூலம் உருவாக்கப்பட்டது.

இந்த தேவாலயம் 1002 சூலை 3 அன்று நான்கு சிரிய கிறிஸ்தவ குடும்பங்களால் நிறுவப்பட்டது. பாலாயில் இருந்த நான்கு கிரிஸ்துவ குடும்பங்கள் தரயில், கூட்டும்கல் (தரயில் மாப்பிள்ளாவின் சகோதரர்), எராகோன்னி ஆகியவை ஆகும். இவர்கள் முதன்மையாக வேளாண்மையிலும், வணிகத்திலும் ஈடுபட்டுவந்தனர். இந்த குடும்பங்களால் நிறுவப்பட்டதே இந்த பாலா தேவாலயம் என்பது பாரம்பரிய வரலாற்று நம்பிக்கையாகும்.

குறிப்புகள்[தொகு]

  1. "St. Thomas Cathedral, Pala, Kerala, India (Syro-Malabar)". www.gcatholic.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.