புனித ஜோக்கிம் மகா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் இரத்தினபுரி நகரத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் புனித ஜோக்கிம் தோட்டம் அமைந்துள்ளது. இத்தோட்டப்பகுதியிலேயே புனித ஜோக்கிம் மகா வித்தியாலயம் 1932 ஆண்டு 20 மாணவர்களுடன் உருவாக்கப்பட்டது. இப்பாடசாலையானது தாழ் நிலத் தேயிலைத் தோட்ட ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கின்றது. இப்பாடசாலையில் வள்ளுவரிற்கு சிலை அமைந்திந்தது சிறப்பாகும். 1997 ஆம் ஆண்டில் தரம் 9 வரை அமைந்திருந்த இப்பாடசாலையானது படிப்படியாக வகுப்புக்கள் உயர்த்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதரப் தேர்விற்கு மாணவர்கள் தோற்றினார்கள். ஆரம்பத்தில் ஒரு லயன் தொகுதியிலேயே இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக் ஏற்ப ஒரு கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டது பின்னர் மேலும் இரண்டு கட்டத்தொகுதிகள் அமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் படி இப்பாடசாலையின் அதிபராக ஜேசுப் பிள்ளை கடமையாற்றுகின்றார். 2009 ஆம் ஆண்டில் 342 மாணவர்கள் கல்வி பயில்வதுடன் இப்பாடசாலையில் 17 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

குறிப்பிடத்தகவர்கள்[தொகு]

  • பொன்னையா (முன்னாள் அதிபர்)
  • என் தேவேரியம் (முன்னாள் அதிபர்)

உசாத்துணை[தொகு]

பரிசு, தினக்குரல் 01 மார்ச்2009