புனித ஜெபமாலை அன்னை பேராலயம் (கருமத்தம்பட்டி)
| புனித ஜெபமாலை அன்னை பேராலயம், கருமத்தம்பட்டி | |
|---|---|
| 11°06′31″N 77°10′56″E / 11.1085°N 77.1821°E | |
| நாடு | இந்தியா |
| சமயப் பிரிவு | கத்தோலிக்கம் |
| Architecture | |
| நிலை | இணைப் பெருங்கோவில் |
| செயல்நிலை | செயல்பாட்டில் உள்ளது |
| குறிப்பீடு செய்யப்பட்டது | 22 சூலை 2019 திருத்தந்தை பிரான்சிசு |
| நிருவாகம் | |
| மறைமாவட்டம் | கோவை மறைமாவட்டம் |
புனித ஜெபமாலை அன்னை பேராலயம், கருமத்தம்பட்டி (Basilica of Our Lady of the Holy Rosary) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கருமத்தம்பட்டி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கத்தோலிக்கப் பேராலயம் ஆகும். ஜெபமாலை அன்னையின் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை இங்குக் கொண்டாடப்படுகிறது.
கருமத்தம்பட்டிக்கு 1640ஆம் ஆண்டு முதலே புனித பயணங்கள் வழியாகப் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். [1] புனித ஜான் டி பிரிட்டோ 3 முறை இந்த தேவாலயத்திற்கு வருகை தந்துள்ளார். 1684 ஆம் ஆண்டு மைசூர் ராஜா சரபோஜியின் வீரர்களால் இடிக்கப்பட்டது, ஆனால் விரைவில் மீண்டும் கட்டப்பட்டது. [2] இந்த தேவாலயம் 1784 இல் திப்பு சுல்தானால் மீண்டும் இடிக்கப்பட்டு 1803 ஆம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டது. [3]
இணைப் பெருங்கோவிலாக அறிவிக்கப்படுதல்
[தொகு]22 சூலை 2019 அன்று கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை மாதா ஆலயம் தமிழ்நாட்டில் 7-வது பேராலயமாக திருத்தந்தை பிரான்சிசு அவர்களால் அறிவிக்கப்பட்டது. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Welcome to Coimbatore DIOCESE". www.coimbatorediocese.org.
- ↑ "Holy Rosary Basilica, karumathampatti, Coimbatore (2020)". www.localprayers.com. Archived from the original on 2021-05-12. Retrieved 2021-05-12.
- ↑ "Holy Rosary Basilica Karumathampatty". www.come2india.org.
- ↑ கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை மாதா ஆலயம் திருத்தலமாக உயர்வு