புனித செபஸ்தியார் திருத்தலம், பாபநாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித செபஸ்தியார் திருத்தலம், பாபநாசம்
அமைவிடம்பாபநாசம், தமிழ்நாடு
நாடுஇந்தியா
சமயப் பிரிவுகத்தோலிக்க திருச்சபை
வரலாறு
நிறுவனர்(கள்)அருட்தந்தை J.C. காப்பன்
அர்ப்பணிப்புபுனித செபஸ்தியார்
நிருவாகம்
மறைமாவட்டம்கும்பகோணம்
குரு
ஆயர்மேதகு ஆயர். அந்தோணிசாமி பிரான்சிஸ், D.D., S.T.L.
அதிபர்அருட்தந்தை. க. கோஸ்மான் ஆரோக்கியராஜ்

பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் (Shrine of St. Sebastian, Papanasam) தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும். நூற்றாண்டு விழா கொண்டாடிய இத்திருத்தலம் பல சிறப்புகளை கொண்டதாகும். சாதி, மத வேறுபாடின்றி இவ்வூர் மக்களின் புனிதராகவும் பாதுகாவலராகவும் செபஸ்தியார் விளங்குகின்றார்.

மறை மாவட்டம்[தொகு]

இந்த திருத்தலம் கும்பகோணம் மறை மாவட்டத்தோடு இணைந்தது. இத்திருத்தலம் நூற்றாண்டு கொண்டாடிய சக்தி வாய்த்த புனித தளமாகும். கிறிஸ்தவ பங்கு தேவாலயத்தில் அருட்தந்தை. க. கோஸ்மான் ஆரோக்கியராஜ் அவர்கள் தற்போது மறை பணியில் இருக்கிறார்கள்.

திருத்தல வரலாறு[தொகு]

இத்திருத்தலம் மேற்குப் பார்த்து அமைந்துள்ளது. இத்திருத்தலத்தின் முதல் பங்கு தந்தையாக 1933ம் ஆண்டு. ஜே . சி . காப்பன் சுவாமிகள் பொறுப்பேற்றார்.

நூற்றாண்டு விழா[தொகு]

1990ம் ஆண்டு திருத்தலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 1992ல் கோவில் முழுவதும். புதுப்பிக்கும் பணி அருட்தந்தை மரியதாஸ் அவர்களால் நடைபெற்றது. கோயிலுக்கு பின்புறம் உள்ள அடர்ந்த காடுகளை அகற்றி புனித செபஸ்தியார் மணிமண்டபமும், புனித செபஸ்தியார் கலையரங்கமும் கட்டினார். கோயிலின் உள்ளே வடபுறத்திலும், தென்புறத்திலும் படுக்கை நிலையில் உள்ள செபஸ்தியாருக்கும், நின்று கொண்டிருக்கும் செபஸ்தியாருக்கும் தனித்தனியாக பீடங்கள் அமைத்தார். மர வேலைபாடுகளுடன் தேர் போல் அமைத்து புனிதரின் சுரூபத்தை (சிலை) நிறுவியுள்ளார். மேலும் கேரளாவிலிருந்த கொண்டு வரப்பட்ட முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட பழமை வாய்ந்த ஆளுயுர சுரூபத்தை ஆலய வளாகத்தி்ல் வைத்து சிறப்பித்துள்ளார்.

திருவிழாவின் சிறப்பு[தொகு]

ஓவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு பெருவிழாவானது உயிர்ப்பு ஞாயிறு பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த திருவிழா மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும். முதல் நாள் மூன்று தேர்களும், அடுத்த நாள் ஐந்து தேர்களும் பாபநாசம் முழுக்க சுற்றி விடியும் பொது ஆலயம் திரும்பும். மூன்றாம் நாள் ஆயர் திருப்பலியுடன் திருவிழா முடியும்.

திருவிழாவிற்கு அனைத்து ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்து வசதிகள் இருக்கும். தொடர் வண்டிகள் நின்று செல்லும். சிறப்பு கடைதெரு, பொழுது போக்கு விளையாட்டுக்களும் இருக்கும்.

பட தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]