உள்ளடக்கத்துக்குச் செல்

புனித இக்னேஷியஸ் தேவாலயம் மஞ்சினிகரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சனிகார தயாரா
அமைவிடம்இந்தியா ஓமல்லூர்
சமயப் பிரிவுசிரியாக் ஆர்த்தடாக்ஸ் தேவாலயம்
மரபுசிரியாக், மலையாளம்
வரலாறு
நிறுவப்பட்டது15-12-1925
நிறுவனர்(கள்)ஸ்கரியா மல்பன் எலவினமன்னில்
டேரோ: மோர் யூலியோஸ் எலியாஸ் கோரோ
பிற அர்ப்பணிப்புமூன்றாம் அந்தியோகியாவின் இக்னேஷியஸ் எலியாஸ்
புனிதப் பொருள்மூன்றாம் இக்னேஷியஸ் எலியாஸ், மோர் யூலியோஸ் எலியாஸ் கோரோவின் புனித நினைவுச்சின்னங்கள்
முன்னாள் ஆயர்(கள்)மோர் யூலியோஸ் எலியாஸ் கோரோ
நிருவாகம்
மறைமாவட்டம்தும்பமன் மறைமாவட்டம்

மஞ்சனிகார தயாரா (Manjinikkara_Dayra) (மலையாளம்: മഞ്ഞനിക്കര ദയറ) என்பது சிரியாக் ஆர்த்தடாக்ஸ் தேவாலாயத்தின் மடாலயம் ஆகும். இது இந்தியாவின் தென் கேரளத்தின், பத்தனம்திட்டா மாவட்டம், ஓமல்லூர் அருகே, மஞ்சனிகாரத்தில் உள்ள மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த மடாலயம் மலங்கரா தேவாலயத்தின் தலைவரின் பிரதிநிதியான மோர் யூலியோஸ் எலியாஸ் கோரோவால் நிறுவப்பட்டது. [1] [2]

வரலாறு[தொகு]

1932 பெப்ரவரி 11 அன்று, காஷிஷோ குரியகோஸ் எலவினமன்னிலின் அழைப்பின் பேரில், உயர்படி முதல்வர் மூன்றாம் இக்னேஷியஸ் எலியாஸ் கல்லிசேரியிலிருந்து மஞ்சினிகாரா மோர் ஸ்டீபனோஸ் தேவாலயத்திற்கு வந்தார். மஞ்சினிகாராவுக்கு வந்ததும், உயர்படி முதல்வர், "இந்த இடம் எங்களுக்கு மிகுந்த ஆறுதலளிக்கிறது; நாங்கள் இங்கு நிரந்தரமாக இருக்க விரும்புகிறோம்" என்றார். பிப்ரவரி 13 அன்று அவர் இறந்தார்.

உயர்படி முதல்வரின் அடக்கத்தல இடம் குறித்து வெவ்வேறு கருத்துக்கள் எழுந்தன மங்களாராவில் உள்ள தேவாலயம் இதற்கு முன் இதுபோன்ற சிக்கலை எதிர்கொண்டதில்லை. [சான்று தேவை] மோர் ஸ்டீபனோஸ் தேவாலயத்தின் வடக்கே ஒரு நிலப்பரப்பில் அவரது உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 14 அன்று, உயர்படி முதல்வரின் இறுதிச் சடங்குகள் அங்கு நடைபெற்றன.

மோர் இக்னேஷியோஸ் டேரோ தேவாலயம் தேவாலயத் தலைவரின் பிரதிநிதியான மோர் யூலியோஸ் எலியாஸ் கோரோவால் உயர்படி முதல்வரின் கல்லறைக்கு மேல் கட்டப்பட்டது. உயர்படி முதல்வரின் நினைவகம் சிரியாக் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தால் பாதுகாக்கப்படுகிறது. பின்னாளில் இந்த இடம் வழிபாட்டுக்குரிய இடமாக ஆனது. ஆண்டுதோறும் மலங்காராவில், பிப்ரவரி 13, ஆண்டு ஓர்ம பெருநாள் திருவிழா இங்கு பிரபலம். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் காலால் கல்லறையை தரிசிக்கின்றனர். [3]

திருவிழா மற்றும் பாத யாத்திரை

[== குறிப்புகள் ==

  1. "Manjinikkara Dayara Church - a Famous Christian Pilgrimage Centre at Omallur, Pathanamthitta - Kerala Tourism". www.keralatourism.org.
  2. "Manjanikkara church fete begins". 5 February 2018. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/manjanikkara-church-fete-begins/article22653595.ece. 
  3. "News18.com: CNN-News18 Breaking News India, Latest News, Current News Headlines". News18.

வெளி இணைப்புகள்[தொகு]