புனிதா அரோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புனிதா அரோரா
{{{lived}}}
VAdm Punita Arora.jpg
பிறப்பு மே 31, 1946 (1946-05-31) (அகவை 74)
சார்பு  இந்தியா
பிரிவு  இந்தியத் தரைப்படை
 இந்தியக் கடற்படை
தரம் Lieutenant General of the Indian Army.svg இந்திய இராணுவத் தளபதி
Indian Vice Admiral.gif வைஸ் அட்மிரல்
ஆணை இராணுவ மருத்துவக் கல்லூரி
விருதுகள் Param Vishisht Seva Medal ribbon.svg பரம் விசிட்ட சேவா பதக்கம்
Sena Medal ribbon.svg சேனா பதக்கம்
Vishisht Seva Medal ribbon.svg விசிட்ட சேவா பதக்கம்

இந்திய இராணுவத் தளபதி (மருத்துவர் வைஸ் அட்மிரல் ) புனிதா அரோரா பரம் விசிட்ட சேவா பதக்கம், சேனா பதக்கம், விசிட்ட சேவா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்கள் பெற்ற இந்திய கடற்படை மற்றும் இந்திய ராணுவத்தின் முன்னாள் கொடி அதிகாரி ஆவார். இந்திய ஆயுதப்படைகளில் மூன்று நட்சத்திர பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் பெண்ணான இவர் இந்திய ராணுவத்தில் தளபதி [1] மற்றும் இந்திய கடற்படையில் வைஸ் அட்மிரல் பதவிகளை வகித்தார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் லாகூரைச் சேர்ந்த ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு வயதாக இருந்தபோது, இவரது குடும்பம் இந்தியப் பிரிவினையின் போது [3] இந்தியாவுக்குச் சென்று உத்தரபிரதேசத்தின் சகாரன்பூரில் குடியேறியது. [4]

கல்வி[தொகு]

சகாரன்பூரில் உள்ள சோபியா பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்தார். அதன் பிறகு இவர் குரு நானக் பெண்கள் இடைநிலைக் கல்லூரிக்குச் சென்றார். 11 ஆம் வகுப்பில் சிறுவர்களுக்கான அரசுப் பள்ளியில் சேரும்போது, அறிவியலை தனது தொழிலாகத் தொடர முடிவு செய்தார். இவர் 1963 இல் புனே, இராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் [5] இது இராணுவ மருத்துவக் கல்லூரியின் இரண்டாவது தொகுப்பாகும். மேலும் இவர் இந்தத் தொகுப்பில் முதலிடம் பிடித்தார். [6]

தொழில்[தொகு]

இனிதா அரோரா 1968 சனவரி 1968 இல் நியமிக்கப்பட்டார். இந்திய கடற்படையின் சர்ஜன் வைஸ் அட்மிரல் ஆவதற்கு முன்பு இவர் புனே இராணுவ மருத்துவக் கல்லூரியின் கமாண்டன்ட் ஆனார். இவர் 2004 செப்டம்பர் 1 அன்று ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் மருத்துவக் கல்லூரிக்கு கட்டளையிட்ட முதல் பெண் அதிகாரியானார். [7] அதற்கு முன்னர் இவர் இராணுவத் தலைமையகத்தில் ஆயுதப்படைகளின் மருத்துவ ஆராய்ச்சியை ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் (மருத்துவ ஆராய்ச்சி) கூடுதல் இயக்குநர் தலைவராக ஒருங்கிணைத்து வந்தார். இராணுவ மருத்துவக் கல்லூரி ஒரு பொதுவாக இருந்ததால், இராணுவத்திலிருந்து கடற்படைக்கு அவர் நகர்ந்தா. இது அதிகாரிகள் தேவையைப் பொறுத்து ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவையில் குடியேற அனுமதிக்கிறது. [8]

விருதுகளும் பதக்கங்களும்[தொகு]

இந்திய ஆயுதப்படைகளில் தனது 36 ஆண்டுகால வாழ்க்கையில் 15 பதக்கங்களுடன் இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. [7]

  • கலுச்சக் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திறமையான மற்றும் சரியான நேரத்தில் உதவி வழங்கிய காரணத்தால் விசிட்ட சேவா பதக்கம் . [7] [9]
  • கினே-எண்டோஸ்கோபி மற்றும் ஆன்காலஜி வசதிகளை வழங்குவதற்காக சேனா பதக்கம் மற்றும் இராணுவ மருத்துவமனைகளில் மலட்டுத்தன்மையுடைய மற்றும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இன்ட்ரோ-கருத்தரித்தல் மற்றும் இனப்பெருக்க நுட்பங்களுக்கு உதவியது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனிதா_அரோரா&oldid=3080952" இருந்து மீள்விக்கப்பட்டது