புனலூர் சுப்ரமணிய ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனலூர் தாத்தா என்பவர் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தவர் ஆவார்.[1] இவரது இயற்பெயர் சுப்ரமணிய ஐயர் என்பதாகும்.[2] சபரி மலைக்கு வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதையும், அவர்களை வழிநடத்தி கோயிலுக்கு கூட்டி செல்வதையும் வழக்கமாக கொண்டார். இதனால் குருசாமியாக ஏற்று எண்ணற்றவர்கள் இவரைப் பின்தொடர்ந்து சபரி மலைக்கு சென்றனர்.

சபரி மலைக்கு செல்லும் வழிகளையும், அங்கிருக்கும் மிருகங்களான யானை வருகின்ற பாதையையும் அறிந்து வைத்திருத்தார். இதனால் புதிதாக முடிகட்டிவருகின்ற பக்தர்கள் ஆபத்தில்லாமல் தங்கும் இடங்களை அறியத்தந்தார்.

பிறப்பும் இளமையும்[தொகு]

நாகர்கோவில் மாவட்டத்தில் சுசீந்திரம் அருகே ஆஸ்ரம் கிராமத்தில் சுப்பரமணிய ஐயர் பிறந்தார். இவர் வேலைக்காக புனலூரில் வந்து தங்கினார். இவருடைய 19ம் வயதில் துறவியாக ஆசை கொண்டு சிருங்கேரி மடத்திற்கு சென்றார். அங்கிருந்த குரு இவருடைய பிற்கால வாழ்க்கையை எடுத்துறைத்து இல்லறத்தில் இருந்தபடி இறை தொண்டாற்ற வலியுருத்தினார். அதனால் தன் துறவர ஆசையை விட்டு இல்லறத்தில் வாழ்ந்தார்.

அன்னதானம்[தொகு]

குளத்துப்புழை எனும் ஊரில் பால ஐயப்பன் கோயிலுக்கு அடிக்கடி செல்வார். அங்கு நடந்துகொண்டிருந்த அன்னதானம் நிறுத்தப்பட்டதை அறிந்தார். எனவே குளத்துபுழையில் வீட்டினைக் கட்டி அங்கு அன்னதானம் செய்யத் தொடங்கினார். இந்த அன்னதானத்தினை ஆரியங்காவு, அச்சங்கோவில் ஆகிய இடங்களிலும் தொடர்ந்து செய்தார்.[2]

குருபுஜை[தொகு]

புனலூர் தாத்தாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறு அன்று குருபூசை செய்கின்றார்கள்.[3]

ஆதாரங்கள்[தொகு]

  1. சக்தி விகடன் 08.12.2015
  2. 2.0 2.1 புனலூர் தாத்தா! விகடன் தளம் (11/12/2012)
  3. புனலூர் தாத்தா 5[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனலூர்_சுப்ரமணிய_ஐயர்&oldid=3614324" இலிருந்து மீள்விக்கப்பட்டது