புனர்ஜனி குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனர்ஜனி குகை (Punarjani Guha) என்பது கேரள மாநிலத்தின், திருச்சூர் மாவட்டத்தில், திருவில்வமலையில் அமைந்துள்ள ஒரு பாறைக் குன்றில் அமைந்துள்ள 150 மீட்டர் இயற்கை சுரங்கப்பாதை ஆகும். [1]

சடங்கு[தொகு]

இங்கு நூழல் (நுழைதல்) என்னும் சடங்கானது ஏகாதசி அன்று பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது. மலையாள மாதமான விருச்சிகத்தில், இந்த நாளானது குருவாயூர் ஏகாதசி அல்லது விருச்சிகா ஏகாதசி நாள் என்று அழைக்கப்படுகிறது. முதலில் பக்தர்கள் குன்றின் அருகே உள்ள பாபனாசினி தீர்த்தத்தில் குளிப்பர். பின்னர் பாறைக்குன்றின் ஒரு பக்கத்தில் ஊர்ந்து மறுபக்கம் வெளியேறி நூழல் சடங்கை நிறைவேற்றுவர். இ்வாறு செய்தால் செய்த பாவங்கள் தீரும் வீடுபேறு அடைந்து மறுபிறப்பு இருந்து என்று கருதப்படுகிறது. [2] [3] [4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனர்ஜனி_குகை&oldid=3564433" இருந்து மீள்விக்கப்பட்டது