புந்தேல்கண்ட் இலக்கியத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புந்தேல்கண்ட் இலக்கிய திருவிழா என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியின் ஒரு பகுதியான ஜான்சியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு இலக்கிய விழா ஆகும்.[1][2][3]

வரலாறு[தொகு]

பண்டேல்கண்ட் இலக்கிய திருவிழா 2020-ல் சமூக ஆர்வலர் சந்திர பிரதாப் சிங்கால் தொடங்கப்பட்டது. இவர் இந்த விழாவின் நிறுவனர் மற்றும் இயக்குநராக பணியாற்றுகிறார். இது புந்தேல்கண்ட் பிராந்தியத்தின் கலை மற்றும் இலக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.[1][4]

2020 விழா[தொகு]

புந்தேல்கண்ட் இலக்கிய திருவிழாவின் முதல் கொண்டாட்டம் பிப்ரவரி 28, 2020 அன்று ஜான்சியில் உள்ள ஜான்சி கோட்டைக்கு அருகிலுள்ள கைவினைக் கண்காட்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்தி மற்றும் புந்தேலி இலக்கியம், நாடகம், பத்திரிகை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆகிய துறைகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட இலக்கியவாதிகள் இதில் கலந்து கொண்டனர். இது புந்தேலி மற்றும் இந்தி இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விவாதங்களை நடத்தியது.[5] இந்தித் துறை, புந்தேல்கண்ட் பல்கலைக்கழகம் மற்றும் புந்தேல்கண்ட் இலக்கிய திருவிழா சங்கம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டால் நடைபெற்றது.[6][7]

விழாவின் தொடக்க அமர்வுக்கு புந்தேல்கண்ட் மாநில பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜே. வி. வைசம்பாயன் தலைமை வகித்தார். இதில் இந்தி நாவலாசிரியர் மைத்ரி புஷ்பா, பத்மசிறீ விருது பெற்ற கைலாஷ் மட்பையா, நடிகர் ராஜா பண்டேலா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.[5]

பங்கேற்பாளர்கள்[தொகு]

பின்வரும் இலக்கியவாதிகள் 2020 விழாவில் பங்கேற்றனர்.[8]

 
  • மைத்ரேயி புஷ்பா
  • பத்மசிறீ கைலாஷ் மட்பையா
  • ரிச்சா அனிருத்
  • அனிக்தா ஜெயின்
  • நவீன் சௌத்ரி
  • ஆசம் குவாட்ரி
  • பிரஹலாத் அகர்வால்
  • இந்திரஜீத் சிங்
  • தினேஷ் சங்கர் சைலேந்திரா
  • இந்திரா டாங்கி
  • குல்தீப் ராகவ்
  • கீத் சதுர்வேதி
  • விவேக் மிசுரா
  • ராஜா பண்டேலா
  • சுஷ்மிதா முகர்ஜி
  • மருத்துவர் சரத் சிங்
  • மருத்துவர் பங்கஜ் சதுர்வேதி
  • பேராசிரியர் ஜே. வி. வைசம்பாயன்

2021 திருவிழா[தொகு]

2021ஆம் ஆண்டில், அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாகத் திருவிழா ரத்து செய்யப்பட்டது.[9]

2022 திருவிழா[தொகு]

இந்த நிகழ்வு அக்டோபர் 14, 2022 முதல் அக்டோபர் 2022 வரை நடைபெற்றது.[9],

பங்கேற்பாளர்கள்[தொகு]

  • ரிச்சா அனிருத்
  • மைத்ரேயி புஷ்பா

மேலும் பார்க்கவும்[தொகு]

  • இந்தியாவில் இலக்கிய விழாக்களின் பட்டியல்
  • லக்னோ இலக்கிய விழா
  • கோரக்பூர் இலக்கிய விழா

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "बुन्देलखण्ड लिटरेचर फेस्टिवल कला-साहित्य और किसानों को दे रहा मंच" (in Hindi). First India News. August 8, 2022. https://firstindianews.com/news/Bundelkhand-Literature-Festival-giving-platform-to-art-literature-and-farmers-Three-day-fest-will-start-from-October-14-1376618762. 
  2. "28 से होगा बुंदेलखंड लिट्रेचर फेस्टिवल" (in Hindi). Amar Ujala. February 7, 2020. https://www.amarujala.com/uttar-pradesh/jhansi/bundelkhand-litrature-festival-from-28february-jhansi-news-jhs1594232115. 
  3. "बुन्देली धरा के साहित्यकारों का योगदान अविस्मरणीय" (in Hindi). Dainik Jagran. February 28, 2020. https://www.jagran.com/uttar-pradesh/jhansi-city-20069322.html. 
  4. "महोत्सव में दिखा साहित्य, संस्कृति का संगम" (in Hindi). Amar Ujala. March 1, 2020. https://www.amarujala.com/uttar-pradesh/jhansi/bundelkhand-litrature-festival-jhansi-news-jhs161392758. 
  5. 5.0 5.1 Ghosh, Arindam (February 29, 2020). "Three-day Bundelkhand lit fest begins in Jhansi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/kanpur/3-day-bundelkhand-lit-fest-begins-in-jhansi/articleshow/74408820.cms. 
  6. "युवा पीढ़ी बुन्देलखण्ड के गौरवपूर्ण इतिहास को समझे : मण्डलायुक्त". Dainik Jagran. February 24, 2020. https://www.jagran.com/uttar-pradesh/jhansi-city-20059908.html. 
  7. "झांसी: पहला बुन्देलखण्ड साहित्य महोत्सव 28 फरवरी से शुरू". Dainik Paligraph. February 24, 2020. https://www.paligraphnews.page/2020/02/jhaansee-pahala-bundelakhand-s-PGYcjX.html. 
  8. "डॉ. शरद सिंह बुंदेलखंड लिटरेचर फेस्टिवल में आमंत्रित" (in Hindi). Dainik Bhaskar. February 26, 2020. https://www.bhaskar.com/mp/sagar/news/mp-news-dr-sharad-singh-invited-to-bundelkhand-literature-festival-090505-6714566.html. 
  9. 9.0 9.1 "14 अक्टूबर से शुरू होगा फेस्ट" (in Hindi). Patrika.com. August 9, 2022. https://www.patrika.com/jaipur-news/art-literature-and-farmers-are-getting-the-platform-the-fest-will-start-from-october-14-7702359/. 

வெளி இணைப்புகள்[தொகு]