உள்ளடக்கத்துக்குச் செல்

புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 2°58′59″N 101°39′39″E / 2.983014°N 101.660711°E / 2.983014; 101.660711
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 PY37 
புத்ரா பெர்மாய்
| எம்ஆர்டி
புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்மலாய்: MRT Putra Permai
சீனம்: 布特拉柏迈站
அமைவிடம்பண்டார் புத்ரா பெர்மாய், செரி கெம்பாங்கான் சிலாங்கூர்  மலேசியா
ஆள்கூறுகள்2°58′59″N 101°39′39″E / 2.983014°N 101.660711°E / 2.983014; 101.660711
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
பிரசரானா
இயக்குபவர் ரேபிட் கேஎல்
தடங்கள்12  புத்ராஜெயா 
நடைமேடை1 தீவு நடைமேடை
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்T544  T545 
பேருந்து போக்குவரத்து ரேபிட் பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலை
தரிப்பிடம்Parking இல்லை[1]
துவிச்சக்கர வண்டி வசதிகள் இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடு PY37 
வரலாறு
திறக்கப்பட்டதுபுத்ராஜெயா வழித்தடம் 16.03.2023
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
தாமான் இக்குயின்
குவாசா
 
புத்ராஜெயா வழித்தடம்
 
சியாரா 16 எம்ஆர்டி
புத்ராஜெயா
அமைவிடம்
Map

புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Putra Permai MRT Station; மலாய்: Stesen MRT Putra Permai) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், 43300 செரி கெம்பாங்கான், புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். தாமான் புத்ரா பெர்மாய் புறநகர் பகுதிக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, சனவரி 2023-இல் திறக்கப்பட்டது.

 PY36  தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையத்திற்கும்  PY38  சியாரா 16 எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையம்  PY37  எனும் நிலையக் குறியீட்டைக் கொண்டுள்ளது.[2] கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையமும் அடுக்கு மாடி அமைப்பைக் கொண்டுள்ளது.

வரலாறு

[தொகு]

"எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா (SSP) வழித்தட சீரமைப்புக் காணொளி" என்ற தலைப்பில் யூடியூப் வலையொளியில் எம்ஆர்டி நிறுவனத்தால் செப்டம்பர் 15, 2016 அன்று வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் தாமான் புத்ரா பெர்மாய் (Taman Putra Permai) எனும் இந்த நிலையத்தின் பெயர் முதன்முதலில் குறிப்பிடப்பட்டது.[3]

அந்தக் காணொளியில், தாமான் புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையத்திற்கான தற்காலிக நிலையக் குறியீடு  S32  என அறிவிக்கப்பட்டது.[2] அதன் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த நிலையத்தின் பெயர் புத்ரா பெர்மாய் (Putra Permai) என மாற்றம் செய்யப்பட்டது.[4][5]

கட்டுமானங்கள்

[தொகு]

புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமானம் S208 (Package S208) உடன்படிக்கையின் கீழ் செயல் படுத்தப்பட்டது. S208 உடன்படிக்கை என்பது அப்போதைய கட்டுமானத்தில் இருந்த  PY36  தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையத்தின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளையும் உள்ளடக்கியது. நிலையங்களின் கட்டமைப்பு பணிகளுக்கான தொகை மொத்தம் RM 219.7 மில்லியன் அக்குமிடா நிறுவனத்திடம் (S.N. Akmida Holdings Sdn Bhd) வழங்கப்பட்டது.[4]

செயல்பாடு

[தொகு]

S208 உடன்படிக்கை, நிலையங்களின் கட்டமைப்புகள் மற்றும் அவை தொடர்பான வேலைகளை உள்ளடக்கியது. அவற்றுள் செரி கெம்பாங்கான் நகர்ப்புறத்தில் உள்ள  PY36  தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமான வேலைகளும் அடங்கும்.[6][4][7]

 PY37  புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 2023 மார்ச் 16-ஆம் திகதி திறக்கப்பட்டது.  KC03   PY14  பத்து கன்டோன்மன் கொமுட்டர் நிலையம் தொடங்கி  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான பிற புத்ராஜெயா வழித்தட நிலையங்களுடன் இணைந்து இந்த நிலையமும் செயல்படத் தொடங்கியது.

அமைவு

[தொகு]

புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையம்; சிலாங்கூர் மாவட்டங்களில் ஒன்றான பெட்டாலிங் மாவட்டத்தில் செரி கெம்பாங்கான் நகரத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நிர்வாகப் பகுதியில் உள்ள பண்டார் புத்ரா பெர்மாய் நகரத்தில் (Bandar Putra Bermai) அமைந்துள்ளது.

புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளான கோத்தா பெர்தானா (Kota Perdana), பண்டார் புத்திரி பெர்மாய் (Bandar Putra Permai), தி அத்மோசுபியர் பேரங்காடி (Komersial The Atmosphere), தாமான் பிரிமா துரோப்பிக்கா (Taman Prima Tropika), ஆலாம் புத்ரா (Alam Putra), லெசுதாரி பெர்தானா 1 (Lestari Perdana 1), லெசுதாரி பெர்தானா 2 (Lestari Perdana 2), விலா பெர்தானா (Villa Perdana), கரிசுமா குடியிருப்பு (Karisma Hill) ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நிலையம் போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது.[8][9]

கட்டமைப்பு

[தொகு]

ரேபிட் கேஎல் வெளியிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து வரைபடத்தின் அடிப்படையில்,  PY37  புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையம் தெரு மட்டத்தில், வாகன நிறுத்துமிட வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.[9]

மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் இந்த  PY37  புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையம் கொண்டுள்ளது.[5]; அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுப் பாதைகள்; நிலையத்தைச் சுற்றியுள்ள தரை மேற்பரப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொடு தொகுதிகள்; அவர்களுக்கு ஏற்ற வகையில் கழிவறைகள்; சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை மின்தூக்கி பொத்தான்கள்; மின்தூக்கி பொத்தான்களில் பிரெய்லி எழுத்துப் பதிவுகள்; மற்றும் சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலைச் சேவை மையங்கள்[9] போன்றவை அடங்கும்.

பயனர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக; பொது கழிவறை வசதிகள், ஆண்கள் பெண்களுக்கான வழிபாட்டு அறைகள் (Surau), வாடிக்கையாளர் சேவை மையங்கள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. நிலையத்தின் நுழைவாயில் மட்டத்தில் உள்ள தற்சேவை பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலம் பயனர்கள் தங்களின் பயணச் சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.[9]

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]

இந்த நிலையத்தில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.[9]

 புத்ராஜெயா  — புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையம்
நுழைவாயில் அமைவிடம் இலக்கு தோற்றம்
A நிலையத்தின் தென்கிழக்கு புத்ரா பெர்மாய் சாலை ஊனமுற்றவர் அணுகல் பேருந்து போக்குவரத்து Hentian untuk kenderran peribadi, e-panggilan dan teksi Lif ke aras legar Eskalator ke aras legar atau aras tanah. Tangga
நகரப் பேருந்துகள் நிறுத்தம்; வாடகை வாகனங்கள் நிறுத்தம்; தனியார் வாகனங்கள் நிறுத்தம்; வாடகை வாகன சவாரி அழைப்பு; மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் (→) அத்மோசுபியர் பேரங்காடி
B நிலையத்தின் வடமேற்கு புத்ரா பெர்மாய் சாலை ஊனமுற்றவர் அணுகல் பேருந்து போக்குவரத்து Hentian untuk kenderran peribadi, e-panggilan dan teksi Lif ke aras legar Tangga
நகரப் பேருந்துகள் நிறுத்தம்; வாடகை வாகனங்கள் நிறுத்தம்; தனியார் வாகனங்கள் நிறுத்தம்; வாடகை வாகன சவாரி அழைப்பு; மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் (→) பண்டார் புத்ரா பெர்மாய் (→) கோத்தா பெர்தானா (→) பெர்சியாரான் கோத்தா பெர்தானா

பேருந்து சேவைகள்

[தொகு]
புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையத்தின் பேருந்து சேவைகள்
பயணவழி வழித்தடம் நடத்துனர் முனையம் இலக்கு
T544  சுங்கை பீசி ரேபிட் கேஎல் SJ884
புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நுழைவாயில் A
தாமான் லெசுதாரி பூச்சோங்
T545  SJ884
புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நுழைவாயில் A
பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையம்

காட்சியகம்

[தொகு]

புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Putra Permai MRT Station | mrt.com.my". mrt.com.my. Retrieved 6 November 2025.
  2. 2.0 2.1 "Klang Valley Integrated Transit Map" [Peta Transit Berintegrasi Lembah Klang] (PDF). MyRapid (in ஆங்கிலம்). Suruhanjaya Pengangkutan Awam Darat. 2021. Retrieved 20 February 2022.
  3. MRT Corp Malaysia (15 September 2016). "MRT Sungai Buloh- Serdang- Putrajaya (SSP) Line Alignment Video" [Video Jajaran Laluan MRT Sungai Buloh- Serdang- Putrajaya (SSP).]. Youtube (in ஆங்கிலம்). Retrieved 21 January 2020.
  4. 4.0 4.1 4.2 M. Hafidz Mahpar (6 November 2016). "MRT Corp: All elevated station contracts for SSP Line awarded" (in en). The Star (Malaysia). https://www.thestar.com.my/business/business-news/2017/11/06/mrt-corp---all-elevated-station-contracts-for-ssp-line-awarded. 
  5. 5.0 5.1 "Awarded Contracts" [Penganugerhan Kontrak]. MRT Corp (in ஆங்கிலம்). Malaysia. Retrieved 2021-12-12.
  6. SunBiz (8 March 2019). "Uni Wall APS secures RM32.14m MRT subcontract from Ahmad Zaki". thesundaily.my (in ஆங்கிலம்). The Sun. Retrieved 8 March 2023.
  7. "Awarded Contracts" [Penganugerhan Kontrak]. MRT Corp (in ஆங்கிலம்). Malaysia. Retrieved 2021-12-12.
  8. "Pangkalan Data Nama Geografi dan Gazetir Kebangsaan". MyGeoName. Jabatan Ukur dan Pemetaan Malaysia. Retrieved 2022-01-06.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 "Maklumat mengenai Stesen MRT Taman Naga Emas". www.mymrt.com.my. Mass Rapid Transit Corporation (MRT Corp) Sdn. Bhd. Retrieved 29 November 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]