புத்துருசு புத்துருசு காலீ
புத்துருசு புத்துருசு காலீ | |
---|---|
![]() | |
6 ஆவது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் | |
பதவியில் 1992 யனவரி 1 – 1996 திசெம்பர் 31 | |
முன்னவர் | கேவியர் பேரெசு த குவெல்லர் |
பின்வந்தவர் | கொபி அன்னான் |
1 ஆவது பிராங்கோபோன் செயலாளர் நாயகம் | |
பதவியில் 1997 நவம்பர் 16 – 2002 திசெம்பர் 31 | |
முன்னவர் | பதவி உருவாக்கம் |
பின்வந்தவர் | அப்து தியுப் |
வெளிவிவகார அமைச்சர் பதில் | |
பதவியில் 1978 செப்தெம்பர் 17 – 1979 பெப்பிரவரி 17 | |
பிரதமர் | மம்துகு சலீம் முஸ்தபா கலீல் |
முன்னவர் | முகம்மது இபுறாகீம் காமில் |
பின்வந்தவர் | முஸ்தபா கலீல் |
பதவியில் 1977 நவம்பர் 17 – 1977 திசெம்பர் 15 | |
பிரதமர் | மம்துகு சலீம் |
முன்னவர் | இசுமாஈல் பகுமி |
பின்வந்தவர் | முகம்மது இபுறாகீம் காமில் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நவம்பர் 14, 1922 காகிறா, எகிப்து |
இறப்பு | 16 பெப்ரவரி 2016 காகிறா, எகிப்து | (அகவை 93)
அரசியல் கட்சி | அரபு சோசலிசவாதி (1978 இற்கு முன்) தேசிய சனநாயகக் கட்சி (1978–2011) சுயாதீனம் (2011–2016) |
வாழ்க்கை துணைவர்(கள்) | லெய்யா மரியா புத்துருசு காலீ |
படித்த கல்வி நிறுவனங்கள் | காகிறா பல்கலைக்கழகம் பாந்தெயொன் சொர்போன் பல்கலைக்கழகம் அரசியற் கற்கை நிறுவனம், பாரிசு |
சமயம் | கிப்திய மரபுவழி |
புத்துருசு புத்துருசு காலீ (بطرس بطرس غالى புத்ருசு புத்ருசு காலீ , Egyptian Arabic pronunciation: [ˈbotɾos ˈɣæːli]; 1922 நவம்பர் 14 – 2016 பெப்பிரவரி 16) ஒரு எகிப்திய அரசியல்வாதியும் 1992 யனவரி முதல் 1996 திசெம்பர் வரை ஐக்கிய நாடுகள் அவையின் ஆறாவது பொதுச் செயலாளராகவிருந்த இராசதந்திரியும் ஆவார். ஒரு கல்வியியலாளராகவும் எகிப்தின் முன்னாள் பதில் வெளிவிவகார அமைச்சராகவுமிருந்த புத்துருசு புத்துருசு காலீ யூகோசுலாவியா பிரிவினை, றுவாண்டா இனப்படுகொலை என்பன உட்பட உலகின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளைப் பற்றிக் கவனஞ் செலுத்தினார். அதன் பின்னர் 1997 நவம்பர் முதல் 2002 திசெம்பர் வரை அவர் முதலாவது பிராங்கோபோன் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றினார்.