உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தாக் மலை

ஆள்கூறுகள்: 7°55′S 112°27′E / 7.92°S 112.45°E / -7.92; 112.45
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தாக் மலை
Mount Butak
Gunung Butak
காவி-புத்தாக் எரிமலைத்தொடரில் வலது புறத்தில் புத்தாக் மலை
உயர்ந்த புள்ளி
உயரம்2,868 m (9,409 அடி)[1]
பட்டியல்கள்அதி கூர்மைச் சிகரம்; ரீபு மலைகள்
ஆள்கூறு7°55′S 112°27′E / 7.92°S 112.45°E / -7.92; 112.45[1]
புவியியல்
நிலவியல்
பாறையின் வயதுஹோலோசீன்
மலையின் வகைசுழல் வடிவ எரிமலை

புத்தாக் மலை (ஆங்கிலம்: Mount Butak; Mount Buthak இந்தோனேசியம்: Gunung Butak) என்பது இந்தோனேசியா, ஜாவா தீவு, கிழக்கு ஜாவா, மலாங்; பிலிட்டார் (Kabupaten Blitar) பகுதிகளில் உள்ள சுழல் வடிவ எரிமலை ஆகும்.[2] இது காவி மலையை ஒட்டியுள்ள ஒரு பெரிய எரிமலை என அறியப்படுகிறது. அதன் வெடிப்புகள் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இல்லை.[1] இந்த மலை 2,868 மீட்டர் (9,409 ft) உயரத்தில் அமைந்துள்ளது.[3]

ஜாவா தீவில் உள்ள 17 அதி கூர்மைச் சிகரங்களில் இதுவும் ஒன்றாகும்.[4]

பொது

[தொகு]

புத்தாக் மலை ஒட்டுமொத்தமாக சற்றே தட்டையானது; மற்றும் அகலமானது; மாறுபட்ட நிலப்பரப்பு அமைப்பைக் கொண்டது. பெரும்பாலான மலையேற்றப் பாதைகள் செங்குத்தானவை. அந்தப் பாதைகள் தேயிலைத் தோட்டங்கள் வழியாகச் செல்கின்றன.[5]

அழகான புன்னிலம், புத்துணர்ச்சியூட்டும் நீரூற்றுகள் மற்றும் பிரமிக்க வைக்கும் மலைக் காட்சிகள் இந்த மலையின் சிறப்பு அம்சங்கள் ஆகும். இந்த மலையில் ஏறுவதற்கு மே முதல் மார்ச் வரை சிறந்த மாதங்கள் என அறியப்படுகிறது.[6] புத்தாக் மலை குளிர்க் காலநிலையைக் கொண்ட ஒரு மலையாகும்.

இரவில் தோராயமாக 0˚C - 10˚C வெப்பநிலை இருக்கும். காலை முதல் நண்பகல் வரை வெப்பநிலை அதிகபட்சமாக 15˚C வரை இருக்கும். இது முதுகுப்பை மலையேற்றம், முகாம் அமைத்தல் மற்றும் மலையேற்றத்திற்கு மிகவும் பிரபலமான பகுதியாக அறியப்படுகிறது.[6]

காட்சியகம்

[தொகு]

புத்தாக் மலையின் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Kawi-Butak". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம். Retrieved 2006-12-26.
  2. Volunteers (19 October 2020). "Gunung Kawi, located in the administrative area of Wonosari Village in the Malang Regency of East Java, is a stratovolcano with no eruption in recorded history". Museum Volunteers, JMM (in ஆங்கிலம்). Retrieved 26 February 2025.
  3. "Butak | It is a little known peak, even for the locals, probably because it is simply the highest point on the rim of an ancient, collapsed, dormant crater". Java Lava. 8 March 2016. Retrieved 28 February 2025.
  4. "Gunung Butak, also spelled as "Buthak" is one of the 17 "ultra prominent peaks" on Java island". Steven's Peak-bagging Journey (in ஆங்கிலம்). 31 July 2023. Retrieved 28 February 2025.
  5. "Gunung Butak | There is a delightful grassy meadow near the summit called Cemoro Kandang which is perfect for camping and the views at the top are spectacular". Gunung Bagging. 12 August 2020. Retrieved 28 February 2025.
  6. 6.0 6.1 "Mount Butak - The best times to visit this trail are May through March". AllTrails.com (in ஆங்கிலம்). Retrieved 28 February 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தாக்_மலை&oldid=4231227" இலிருந்து மீள்விக்கப்பட்டது