புத்தர் பிறந்தநாள் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புத்தர் பிறந்தநாள் பூங்காவில் புத்தர் சிலை

புத்தர் பிறந்தநாள் பூங்கா (Buddha Jayanti Park) இந்தியாவிலுள்ள புது தில்லி நகரின் தெற்கு முகட்டில் அமைந்துள்ளது. கெளதம புத்தர் ஞானம் பெற்ற 2500வது ஆண்டு விழாவை முன்னிட்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது[1].

இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒருபோதி மரக்கன்று இங்கே நடப்பட்டுள்ளது. 1964 ஆம் ஆண்டு அக்டோபர் 25 இல் அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த லால் பகதூர் சாசுதிரி இம்மரக்கன்றை அங்கு நட்டார்.

பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு செயற்கை தீவின் காட்சிக் கூடத்தில் ஒரு முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை அக்டோபர் 1993 இல் 14 வது தலாய் லாமாவால் அர்ப்பணிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வைகாசிப் பௌர்ணமியன்று இங்கு புத்தர் பிறந்த நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Buddha Jayanti Park". பார்த்த நாள் 14 January 2016.