உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தர் கலைக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்தர் கலைக்குழு என்பது தமிழ்நாட்டில் இயங்கும் ஓரு பறையிசைக் கலைக்குழு ஆகும். 25 கொண்ட முழு மற்றும் பகுதி நேரக் கலைஞர் அடங்கிய இந்த கலைக்குழு தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டின் பழமையான நாட்டுப்புற கலைகளில் ஒன்றான பறையிசை சம்மந்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது. மேலும் இக்கலைக்குழு சார்பாக, விருப்பமுள்ள அனைவருக்கும் பறையிசையைக் கற்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

இந்தக் குழுவினை மணிமாறன் (பிண்ணனிப் பாடகி மகிழினி மணிமாறனின் கணவர்) 2007 ஆம் ஆண்டு முதல் உருவாக்கி வழிநடத்தி வருகின்றார்.[1]


நோக்கமும் கொள்கையும்[தொகு]

நாட்டுப்புறக் கலையான பறையாட்டத்தை உலகம் முழுவதும் பரப்புவதும், மற்ற கலை வடிவங்களில் மரியாதைக்குரிய இடத்தைப் பெறுவதும் இக்குழுவின் முதன்மை நோக்கமாகும்.

நிகழ்ச்சிகள்[தொகு]

இக்கலைக்குழுவின் முதன்மை நிகழ்ச்சி பறை ஆட்டமாகும். அத்தோடு, ஒயிலாட்டம், பெரிய குச்சி ஆட்டம், சிலம்பாட்டம், கழியாலட்டம் மற்றும் பொம்மையாட்டம் போன்ற பிற நாட்டுப்புற கலை வடிவங்களிலும் தேர்ச்சி பெற்று நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.[2]

இந்த கலைக்குழுவினர் பின்வரும் பல்வேறு காரணங்களுக்காக இறுதிச் சடங்குகளுக்கு பறையிசைக்க போவதில்லை என்பதை கொள்கை முடிவாகவே வைத்துள்ளனர்.[3] ஏனென்பதை இதன் நிறுவனர், "இறுதிச் சடங்குகளில் இசைக்கும் போது, காலில் சலங்கைகளோ, இசைக்கான உடைகளோ அணிய முடியாது மேலும், பெண் கலைஞர்கள் தகன மைதானங்களில் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. அத்தோடு, அந்த நேரத்தில் ஊதியம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதும் நியாயமற்றது" என்பதாகக் கூறுயுள்ளார். மேலும் புத்தர் கலைக்குழுவில் உள்ள கலைஞர்கள் மதுபானம் அருந்திவிட்டு பறையை இசைப்பதில்லை என்பதிலும் உறுதியாக உள்ளனர்.இதுவரை, புத்தர் கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி இந்தியா முழுவதும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.

இவ்வாறு 'அழைப்பின் பேரில்' நடத்தும் நிகழ்ச்சிகளைத் தவிர, புத்தர் கலைக்குழுவின் சார்பாக, சமூக காரணங்களுக்காகவும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]

2012 ஆம் ஆண்டில், விகடன் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் புத்தர் கலைக்குழு இடம்பெற்றதோடு, [4] 2014 ஆம் ஆண்டில், மக்களுக்கான சிறந்த கலைக் குழுவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. [5]அதே ஆண்டில், இக்கலைக்குழுவின் நிறுவனரும் ஒருங்கிணைப்பாளருமான மணிமாறன் மகிழினி., புதிய தலைமுறையின் மதிப்புமிக்க தமிழன் என்ற விருதைப் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Drummer woman makes it big
  2. "உலகம் முழுக்க பறை ஒலிக்கட்டும்!".
  3. Finding Paraiaattam a better place
  4. Real Heroes of Tamil Nadu: Manimaran
  5. Puthiya Thalaimurai Viruthugal 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தர்_கலைக்குழு&oldid=3880296" இலிருந்து மீள்விக்கப்பட்டது