உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தரும் அவரது தம்மமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தரும் அவரது தம்மமும்
The Buddha and His Dhamma
புத்தரும் அவரது தம்மமும் நூலின் அட்டைப்பக்கம் (1957)
நூலாசிரியர்அம்பேத்கர்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
பொருண்மைநவயான பௌத்தம்
வெளியீட்டாளர்சித்தார்த்தா கல்லூரி வெளியீடுகள், மும்பை[1]
வெளியிடப்பட்ட நாள்
1957
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்599
அடுத்த நூல்Dr. Babasheb Ambedkar: Writings and Speeches, Vol. 12. Unpublished writings; Ancient Indian commerce; Notes on laws; Waiting for a visa; Miscellaneous notes, etc.

புத்தரும் அவரது தம்மமும் (The Buddha and His Dhamma) என்பது இந்திய அறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான அம்பேத்கர் எழுதிய ஒரு நூலாகும். இது அவரது மறைவுக்குப் பின்பு 1957 ஆம் ஆண்டு வெளியானது. இது புத்தரின் வாழ்கையையும், அவரது மெய்யியலை விளக்குவதாக உள்ளது. சமூக சமத்துவம், நன்னெறிகள், சாதி அமைப்பை நிராகரித்தல் போன்றவற்றை வலியுறுத்தும் ஒரு நவீன கட்டமைப்பில் பௌத்தத்துக்கு மறுவிளக்கத்தை தருகிறார். இந்த நூல் நவயான பௌத்தத்திற்கு (அம்பேத்கரிய பௌத்தம் என்றும் அழைக்கப்படுகிறது) ஒரு அடிப்படை நூலாகத் திகழ்கிறது, மேலும் அதனைப் பின்பற்றுபவர்களால் இது ஒரு புனித நூலாகக் கருதப்படுகிறது. [2] [3] [4] அம்பேத்கர் தனது மரணத்திற்குச் சற்று முன்பும், 1956 அக்டோபரில் அவர் பகிரங்கமாக பௌத்த சமயத்திற்கு மாறியதற்குச் சற்று முன்பும் இந்த நூலின் கையெழுத்துப் பிரதியை எழுதி முடித்தார்.

வெளியீட்டு வரலாறு

[தொகு]

1956 திசம்பர் 6 அன்று அம்பேத்கர் இறந்ததைத் தொடர்ந்து, இந்தப் புத்தகம் 1957 இல் அவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இது 1979 இல் மகாராட்டிர அரசின் கல்வித் துறையால் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: எழுத்துகள் மற்றும் உரைகள் என்ற புத்தகத் தொகுதியில் 11 ஆம் தொகுதியாக மறுபதிப்பு செய்யப்பட்டது. இதில் மேற்கோள்களின் பட்டியல் மற்றும் பொருளடக்கம் ஆகியவை அடங்கும். [5]

ஆகாஷ் சிங் ரத்தோர் மற்றும் அஜய் வர்மா ஆகியோரால் பதிப்பிக்கப்பிட்ட ஒரு ஆய்வுப் பதிப்பு, 2011 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் வெளியிடப்பட்டது. இந்தப் பதிப்பில் விளக்கக் குறிப்புகள், பௌத்த நியதி நூல்களுக்கான மேற்கோள்கள், பாரம்பரிய சாரத்தை அம்பேத்கர் எவ்வாறு தழுவிக்கொண்டார் என்பது குறித்த பகுப்பாய்வு ஆகியவை அடங்கியுள்ளன. [3]

முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி, மலையாளம், பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[6][7]

தொடர்புடைய படைப்புகள்

[தொகு]

அம்பேத்கர் பௌத்த சமயத்தைப் பற்றிய தனது பார்வையைப் புரிந்துகொள்வதற்கு அவசியமான படைப்புகளில் ஒன்றாக புத்தரும் அவரது தம்மமும் நூலைக் கருதினார். மற்ற இரண்டு நூல்கள் பின்வருமாறு:

  • புத்தரும் கார்ல் மார்க்சும் [8]
  • பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும் [9]

பரவலர் பண்பாட்டில்

[தொகு]

பிரவீன் டாம்லே இயக்கி 2013 ஆம் ஆண்டு இந்தி மொழி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான சம்யக் புத்தரின் பயணம், என்பது இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இது கௌதம புத்தரின் பிறப்பு முதல் ஞானம் வரையிலான வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. [10] [11]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ambedkar, B. R. The Buddha and His Dhamma, retrieved 2008-12-27
  2. Khiamniungan, Chiangmong (2023). "On the Editions of Dr B. R. Ambedkar’s The Buddha and His Dhamma". Studies in Indian Politics 11 (1). doi:10.1177/23210230231166190. https://journals.sagepub.com/doi/abs/10.1177/23210230231166190. 
  3. 3.0 3.1 Rathore, Aakash Singh; Verma, Ajay (2011). The Buddha and His Dhamma: A Critical Edition. Oxford University Press. ISBN 9780198068679.
  4. Queen, Christopher (2015). Emmanuel, Steven M. (ed.). A Companion to Buddhist Philosophy. John Wiley & Sons. pp. 529–531. ISBN 978-1-119-14466-3.
  5. Khiamniungan, Chiangmong (2023). "On the Editions of Dr B. R. Ambedkar’s The Buddha and His Dhamma". Studies in Indian Politics 11 (1). doi:10.1177/23210230231166190. https://journals.sagepub.com/doi/abs/10.1177/23210230231166190. 
  6. https://web.archive.org/web/20251228104141/https://books.google.co.in/books/about/The_Buddha_and_His_Dharma.html?id=yvWqzgEACAAJ&redir_esc=y
  7. https://web.archive.org/web/20251228104349/https://www.amazon.com/BUDDHA-HIS-DHAMMA-Bhimrao-Ambedkar-ebook/dp/B013NO6JH2
  8. Khiamniungan, Chiangmong (2023). "On the Editions of Dr B. R. Ambedkar’s The Buddha and His Dhamma". Studies in Indian Politics 11 (1). doi:10.1177/23210230231166190. https://journals.sagepub.com/doi/abs/10.1177/23210230231166190. 
  9. Khiamniungan, Chiangmong (2023). "On the Editions of Dr B. R. Ambedkar’s The Buddha and His Dhamma". Studies in Indian Politics 11 (1). doi:10.1177/23210230231166190. https://journals.sagepub.com/doi/abs/10.1177/23210230231166190. 
  10. Khiamniungan, Chiangmong (2023). "On the Editions of Dr B. R. Ambedkar’s The Buddha and His Dhamma". Studies in Indian Politics 11 (1). doi:10.1177/23210230231166190. https://journals.sagepub.com/doi/abs/10.1177/23210230231166190. 
  11. Khiamniungan, Chiangmong (2023). "On the Editions of Dr B. R. Ambedkar’s The Buddha and His Dhamma". Studies in Indian Politics 11 (1). doi:10.1177/23210230231166190. https://journals.sagepub.com/doi/abs/10.1177/23210230231166190.