புத்தனேரி ரா. சுப்பிரமணியன்
Appearance
ரா. சுப்பிரமணியன் கவிஞர், எழுத்தாளர், நாடகப் பாடலாசிரியர் எனப் பல்துறையில் திறமைகொண்ட தமிழறிஞராவார். இவர் திருநெல்வேலி மாவட்டம், புத்தனேரியில் இராமையா- தாயம்மாளுக்கு மகனாக 1922 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் நாளன்று பிறந்தார்.
தமிழ்ப் பணிகள்
[தொகு]இளங்கலைப் பட்டம் (பி.ஏ) பெற்ற இவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றினார். டி. கே. எஸ் சகோதரர்கள், நவாப் ராஜமாணிக்கம், என். எஸ். கே போன்றவர்கள் இயற்றிய நாடகங்கள் பலவற்றிற்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.[1][2] செந்தமிழ்ச் செல்வி எனும் இலக்கிய இதழில் கௌரவ ஆசிரியராகவும் தமிழ் உலகம், குயில், போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இறப்பு
[தொகு]பல்துறை வித்தகராகிய சுப்பிரமணியன் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாளன்று இறந்தார்.
படைப்புகள்
[தொகு]கவிதை நூல்கள்
[தொகு]- பொங்கல் விருந்து
- பாரதி ஒரு நெருப்பு
- அம்புலிப் பாட்டுப் பாடாதே
- அன்னை இந்திரா தியாக காவியம்
- என்றும் இளமை. உள்ளிட்ட பல
திறனாய்வு நூல்கள்
[தொகு]- பாட்டும் கூத்தும்
- பாவேந்தர் நெஞ்சில் குழந்தைகள்
நாடகங்கள்
[தொகு]- பாரதி யார்?
- பிள்ளைப் பாண்டியன்
- தலை பிழைத்தது
- வீரப் பரம்பரை
- பிறந்தது புதுயுகம்
தொகுப்புப் பணிகள்
[தொகு]- நாடகக் கலைக்களஞ்சியம்
- பண் ஆராய்ச்சி
- மகாகவி மலர்
- கிராமியக் கலைவிழா மலர்
பெற்ற விருதுகள்
[தொகு]- கவிஞர்கோ(1972)
- கலைமாமணி(1976)
- செஞ்சொற் கவிஞர்(1979)
- முத்தமிழ் வித்தகர்(1977)
- புதுமைப் பாவலர்(1980) முதலான பல விருதுகள் பெற்றுள்ளார்.[3]