புத்தனேந்தல் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புத்தனேந்தல் அணை அல்லது தாமல் அணை, மேமாளூர் அணை என்பது தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒரு அணையாகும். [1]

அமைவிடம்[தொகு]

இந்த அணையானது திருக்கோவலூர் வட்டத்தில் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே ஏறக்குறைய 15 கி.மீ. தொலைவில் புத்தனேந்தல் என்னும் ஊரின் எல்லையில் அமைந்துள்ளது. ஆற்றின் தென்கரையில் புத்தனேந்தல் ஊர் இருக்கிறது. இங்கே இயற்கையாகவே கெடிலத்தின் குறுக்கே அணைத்தடுப்புபோல் பாறைகள் உயர்ந்துள்ளன. அந்தக் குறுக்குப் பாறைத் தடுப்பு ஒரு சிறிய அணை போல் சிறிய அளவில் பயன் தந்து வந்தது. இங்கே ஆற்றிற்குத் தென்பால் தாமல் என்னும் ஊர் இருப்பதால் தாமல் அணை எனச் சிலரும், வடபால் மேமாளூர் என்னும் ஊர் இருப்பதால் மேமாளூர் அணை எனச் சிலரும் அழைத்து வந்ததும் உண்டு. இங்கே உள்ள குறுக்குப் பாறைமேல் 1953 ஆம் ஆண்டு சுவர் எழுப்பப்பட்டு உயரமாகச் செயற்கை அணை கட்டப்பட்டது. அதனால் இவ்வணை மற்ற அணைகளினும் மிகவும் உயரமாய்த் தோற்றமளிக்கிறது. அணைக்கு மேற்புறம் ஆற்றின் இருபக்கமும் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக 519 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி கிடைத்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பாசனத்தால் அந்த வட்டாரத்து வயல்கள் மிகவும் செழிப்பாக உள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தென் பெண்ணையின் தொப்புள்கொடி கெடிலம்! “கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்!” அத்தியாயம் 11, ஆனந்த விகடன், 2017, மார்ச், 30
  2. புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன் தமிழாய்வகம். pp. 247–248. 11 சூன் 2020 அன்று பார்க்கப்பட்டது. line feed character in |publisher= at position 11 (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தனேந்தல்_அணை&oldid=2995123" இருந்து மீள்விக்கப்பட்டது