உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தனாம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தனாம்பட்டி
—  சிற்றூர்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
தலைவர்
மக்கள் தொகை 3,163 (2001)
பாலின விகிதம் 1021 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

புத்தனாம்பட்டி (Puthanampatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தில் முசிறி வட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிற்றூராகும்.

வரலாறு

[தொகு]

புத்தனாம்பட்டி ஓர் காலத்தில் ‘புனதை’ என அழைக்கப்பட்டது.

மக்கள்தொகை மற்றும் புவியியல்

[தொகு]

2001 ஆண்டு கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 3,163 ஆகும். ஆண்களும் பெண்களும் மக்கள்தொகையில் 50% உள்ளனர். சராசரி படிப்பறிவு 90%, தேசிய சராசரி (59.5%)யைவிட கூடுதலாகும். ஆண்கள் படிப்பறிவு 85%, மற்றும் பெண்கள் படிப்பறிவு 89%. 8% நபர்கள் ஆறு அகவைக்கும் குறைந்தவர்கள்.

திருச்சியிலிருந்து வடமேற்கே 33 கி.மீ தொலைவிலும் துறையூரிலிருந்து தென்கிழக்கில் 16கி.மீ தொலைவிலும் பெரம்பலூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் தென்மேற்கிலும் அமைந்துள்ளது.

கல்வி

[தொகு]

1947 ஆம் ஆண்டு எம். மூக்கப்பிள்ளை என்பவர் இங்கு நேரு உயர்நிலைப் பள்ளியை நிறுவினார். இங்கு பள்ளிக் கல்விக்கென ஸ்ரீ சண்முகநாதன் துவக்கப் பள்ளி உள்ளன. கல்லூரிப் படிப்புக்காக நேரு நினைவுக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரி கலை மற்றும் அறிவியல் துறைகளிலான பட்டப்படிப்புகளை வழங்குகிறது. திருச்சி மாவட்டத்திற்கு அண்மையிலுள்ள மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் படிக்க வசதியாக அமைந்துள்ள இக்கல்லூரியையும் எம். மூக்கப்பிள்ளை என்பவர்தான் நிறுவினார். இக்கல்லூரியை 1967ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கா. ந. அண்ணாத்துரை திறந்து வைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பட்டியல் மற்றும் பட்டங்களை பாரதிதாசன் பல்கலைக்கழகம் அளிக்கிறது.

போக்குவரத்து

[தொகு]

புத்தனாம்பட்டி சாலை மாவட்டத் தலைநகர் திருச்சியுடனும், துறையூருடனும் தரைவழிச் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு அருகில் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் உத்தமர்கோவில், 35 கி.மீ தொலைவிலிருக்கும் திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம் என இரு தொடருந்து நிலையங்கள் உள்ளன. இந்த ஊருக்கு அண்மையிலுள்ள வானூர்தி நிலையம் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையமாகும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தனாம்பட்டி&oldid=3843709" இலிருந்து மீள்விக்கப்பட்டது