புது விடியல் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புது விடியல் என்பது 1980களில் வெளியான ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது தமிழ்நாட்டின், கும்பகோணத்தில் இருந்து வெளிவந்ததது. இதை பழ. ராதாக்கண்ணன் என்பவர் வெளியிட்டார்.[1]

புது விடியல் இதழானது 1984 செப்டம்பர் முதல் கும்பகோணத்தில் இருந்து வெளியானது. சமூக நோக்குடன் பல சிக்கல்களையும் ஆராயும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் வெளியிடப்பட்டன. முன்னணி எழுத்தாளரான கரிச்சான் குஞ்சு அவன் கதை என்ற சுவையான தொடர் கதை ஒன்றை இதில் எழுதியுள்ளார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 255–257. 13 நவம்பர் 2021 அன்று பார்க்கப்பட்டது.