புதுவை தாவரவியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதுவை இந்திய நாட்டில் உள்ள ஒரு யூனியன் பிரதேசம் ஆகும் .இங்கே சுற்றுலா வருபவர்கள் உள்ளநாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்தும் பலர் வருகிறார்கள் .சுற்றுலா வருபவர்கள் பெரிதும் கவர கூடிய ஒரு சுற்றுலா மையம் ஆக புதுவை தாவரவியல் பூங்கா திகழ்கிறது .சுற்றுலா வரும் பயணிகளை கவரும் பொருட்டு இங்கு பல வகை செடி கொடிகள் அறிய வகை மரங்கள் ,இசை நடன நீருற்று ,பூங்காவை சுற்றி வரும் ஒரு தொடர்வண்டி என பல சிறப்பு அம்சங்கள் இங்கு உள்ளன இங்கு பல வகையான கள்ளி செடிகள் காண படுகின்றன

அமைவிடம்[தொகு]

தாவரவியல் பூங்கா புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது . பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ மூலம் இங்கு செல்லலாம் புதுவை பழைய பேருந்து நிலையம் மற்றும் அன்ன சதுக்கத்தில் இருந்து சில நிமிட நடை பயணத்திலும் இங்கு சென்று அடையலாம் . பூங்காவிற்கு வெளிய உழவர் சந்தை ,பான்லே பாலகமும் செயல் பட்டு வருகிறது[1] [2]பல வகை வண்ண மீன்கள் கடல் ஆமை ஒன்றும் இங்குள்ள நீர்வாழ் காட்சிச்சாலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது அதனை கண்டு களிக்க கட்டணம் வசூலிக்க படுகிறது .

பார்வை நேரம்[தொகு]

சுற்றுலா வரும் பயணிகள் இங்கு பார்வை இட பார்வையாளர் நேரம் ஒதுக்க பட்டு உள்ளது காலை :-09:00 மணிமுதல் நண்பகல் 12:45 வரை மாலை:- 14:00 மணி முதல் 17:45 வரை பூங்காவை சுற்றி பார்க்க கட்டணம் ஏதும் இல்லை .அனால் நீர்வாழ் காட்சிச்சாலை மற்றும் தொடர்வண்டி பயணத்திற்கு நுழைவு கட்டணம் உண்டு .

வரலாறு[தொகு]

இந்த தாவரவியல் பூங்கா இந்தியாவில் இருக்கும் தலை சிறந்த பூங்காக்களில் ஒன்றாக கருதப்படுகிறது .இதன் பரப்பளவு 22 ஏக்கர் ஆகும். இந்த பூங்கா கலோனியல் பூங்கா என்றும் முற்காலத்தில் அழைக்கபட்டது .1826 ஆம் ஆண்டு தலைசிறந்த தாவரவியலாளர் பெரோட்டேட்(C.S.PERROTET)பல அறிய மற்றும் முக்கிய தாவரங்கள் கொல்கத்தா ,சென்னை ,இலங்கை மற்றும் ரீயூனியன் தீவு ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டது .அதாவது 1500 தாவரவகைகளை உள்ள்ளடிகியது.1831 இல் மேலும் பல மரங்கள் மற்றும் செடிகளை நட்டு புனரமைத்து புதியபொலிவு ஊட்டப்பட்டது .இவருடிய நினைவு சின்னம் பூங்காவின் உள்ளே அமைந்து உள்ளதை காணலாம் .1960 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசிடம் இருந்து புதுவை முழு அதிகாரம் பெற்ற பிறகு மாநில தோட்டகலை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இங்கு இருக்கும் பெரும்பாலான மரங்களுக்கு பெயர் பலகை உண்டு அதில் அந்த மரங்களின்

 • தாவரவியல் பெயர்
 • பொது பெயர்
 • தமிழ் பெயர்
 • தாவரத்தின் குடும்ப பெயர்
Botanical garden puducherry,india.JPG
Childrens train botanical garden puducherry,india.JPG
Annonaceae family trees.JPG

பூங்காவின் அங்கங்ககள்[தொகு]

 • குழந்தைகளுக்கான தொடர்வண்டி
 • ஒரு இசை நடன நீரூற்று
 • ஆறு நீரூற்று
 • பாறைகள் நிறைந்த ஜப்பான் தோட்டம்
 • நீர்வாழ் காட்சிச்சாலை
 • ஜவகர் பால்பவன்
 • கல் மர பூங்கா

குழந்தைகளுக்கான தொடர்வண்டி[தொகு]

குழந்தைகளுக்கான தொடர்வண்டி1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி துவங்கபட்டது .இந்த தொடர் வண்டிக்கு புலவர் சுப்ரமணிய பாரதியார் பெயர் வைக்கபட்டது .இந்த தொடர் வண்டியில் துவகபட்டபோது இரண்டு பயனர் பெட்டிகள் மட்டும் இருந்தன நிலையத்தின் பெயர் ஜகஜீவன்ராம் என்று வைக்கபட்டது .தொடர்வண்டியின் பாதை சுமார் 0.75 கிலோமீட்டர் ஆகும்

நறுமண தோட்டம்[தொகு]

பூங்காவில் உள்ள 34 மனைகளில் 2 மனைகள் முழுவதுமாக செண்பகம் மற்றும் பாரிஜாத மரங்கள் நடபடுள்ளன ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த மரங்கள் பூக்க தொடங்கும் அப்போது அன்னருமணம் அங்கு வருபவர்களை எல்லை இல்ல மகிழ்ச்சியில் ஆழ்த்தும்

மலர் கண்காட்சி[தொகு]

புதுவையில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடைபெறும் .1978 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த மலர் கண்காட்சி நடைபெறும் நாட்களில் பல வண்ண செடிகளும் மர வகைகளும் பார்வைக்கு வைக்கப்படும் .பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த கண்காட்சி நடைபெறும்.இக்கண்காட்சி புதுவை அரசின் வேளாண்துறை சார்பில் நடத்தபடுகிறது .இதை புதுவை மட்டும்மின்றி உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் கண்டு களிகின்றனர்.[3]

தானே புயலின் பொது பூங்காவில் ஏற்பட்ட பாதிப்பு[தொகு]

31 டிசம்பர் 2011 அன்று தானே என்ற மிக கடுமையான புயலினால் புதுவை பாதிப்புக்கு உள்ளானது .புதுவையின் பல இடங்களில் பெருத்த சேதம் ஏற்படுத்திய இந்த புயல் தாவரவியல் பூங்காவில் 300க்கும் மேற்பட்ட மரங்களை வேரோடு சிதைத்து இருந்ததது இதில் பெரிதும் வேதனை அளிக்கும் செய்தி அவற்றில் பல மரங்கள் 150 வருடங்களுக்குமேல் வாழ்ந்த மரங்கள் ஆகும் .டிசம்பர் 2013 பிறகு புயலினால் பாதிகப்பட்ட பசுமை கம்பளம் சீரமைக்க தோட்டகலை மற்றும் வேளாண்துறை சார்பில் 400 தாவரவகை நடப்பட்டு பசுமை கம்பளத்தை மேம்படுத்த திட்டம் இட பட்டது [4]அது மட்டும் இன்றி ருத்ராட்ச மரம் ஏலக்காய் மற்றும் சில நறுமணம் தரும் மரங்கள் மட்டற்ற மரங்களுக்கு இடையிடையே நட பட்டு உள்ளன.மேலும் தோட்டகலைதுறை பல பசுமைமாற மரங்களை நடவும் அந்த மரங்கள் அருகே சில புதர் செடிகளை நடவும் திட்டம் இடப்பட்டுள்ளது .

ஹாலிவுட் திரைபடத்தில் தாவரவியல் பூங்கா[தொகு]

ஹாலிவுட் திரைப்படம் ஆன லைப் ஒப் பை (life of pie) புதுவை மையமாக கொண்ட கதையை உடைய ஒரு ஹாலிவுட் திரைப்படம் .இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் புதுவையில் பிறந்து வளர்ந்தவராக காட்டப்படும் .அதில் பல காட்சிகள் இந்த தாவரவியல் பூங்காவில் எடுக்கப்பட்டது .இந்த திரைப்படம் பல சர்வதேசிய விருதுகளை வென்றது .இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆங் லீ .இந்த படத்தில் வரும் பல மிருககாட்சிச்சாலை சம்பத்தப்பட்ட பல திரைக்காட்சிகள் இந்த பூங்காவில் படமாகபட்டது .இந்த படத்தின் 30 சதவிகித காட்சிகள் புதுவையில் எடுக்கபட்டது .இந்த படத்தின் மூலம் புதுவையின் பல பகுதிகள் உலகுக்கு தெரிய வந்து உள்ளது அதில் தாவரவியல் பூங்கா ஒரு பேரு பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

ஜவகர் பாலர் பவன்[தொகு]

இங்கு குழந்தைகளுக்காக ஒரு பலர் பவன் உள்ளது .இந்த பலர் பவனில் ஒரு நூலகம் உள்ளது .அதில் அங்கிலம் ,தமிழ், ஹிந்தி போன்ற பல மொழி புத்தகம் நூற்று கணக்கில் உள்ளது . இங்கு உள்ள வேதியல் ஆய்வு கூடத்தில் பல வேதியியல் பொருள்கள் இருக்கிறது அதனை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ளலாம் . மேலும் மிருதங்கம் ,வீணை மற்றும் பல இசை கருவிகளை மாணவர்களுக்கு இங்கு கற்று தர படுகின்றன .இந்த பாலற்பவனில் கலைகளை கற்க உறுபினராக வேண்டும் .இவர் மட்டும் இன்றி கராத்தே மற்றும் தகேவண்டோ போன்ற பல போட்டிகளும் இங்கு நடைபெறும். போட்டியில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்ளுவார்கள் .இந்த ஜவகர் பாலர்பவன் பள்ளிகல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
2010 ஆம் ஆண்டு ஜவகர் பாலர் பவன் மற்றும் பள்ளி கல்வி துறை இணைந்து கோடை கால நிகழ்ச்சிகளுக்காக பல பயிற்சிகளை கொடுத்தது அதில் வாய்பாட்டு,வயலின் ,வீணை ,மிருதங்கம்,கிதார்,இசைவிசைபலகை ,மேளம் ,பரதம்,ஓவியம் ,தையல்கலை,கிரிக்கெட் ,சதுரங்கம் ,வலைபந்து அடங்கும் .2006ஆம் ஆண்டு பாலர் பவனில் பயலும் மாணவர்களுக்கு இலவசமாக ரொட்டியும் பாலும் வழங்கப்பட்டது .பால்பவன் சேர்ந்த மாணவர்கள் அவர்களுக்கு மிக பெரும் பெருமையை தேடி தந்து உள்ளனர் .இந்த பாலர் பாவனை சேர்ந்த ரேவதி என்ற புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று பாலஸ்ரீ பட்டம் பெற்றார் .இந்த பாலஸ்ரீ பட்டம் அவருக்கு பரதநாட்டியத்திற்காக வழங்கப்பட்டது .[5]மேலும் மொங்கோலியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் சபையில் இங்கு இருந்து 5 குழந்தைகள் பங்கு பெற்றனர்

கல் மர படிமங்கள்(அ)தொல்லுயிர் எச்சம் பூங்கா[தொகு]

இங்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மரங்கள் தட்ப வெட்ப மாறுதல்களால் கல் மர படிமங்கள் ஆகா மாறிவிட்டன இங்கு இருக்கு கல்மரங்கள் புதுவை அருகில் உள்ள திருவக்கரை பகுதியில் இருந்து கொண்டு வர பட்டவை ஆகும் .

தொல்லுயிர் படிமங்கள்
தொல்லுயிர் படிமங்கள்

வெளிஇணைப்புகள்[தொகு]