புதுவை இரத்தினதுரை
புதுவை இரத்தினதுரை | |
|---|---|
| பிறப்பு | வரதலிங்கம் இரத்தினதுரை திசம்பர் 3, 1948 புத்தூர், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
| புனைபெயர் | வியாசன் |
| தொழில் | கவிஞர், சிற்பம் |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| வகை | தமிழ்த் தேசியம் |
| கருப்பொருள் | கவிதை, புரட்சிப் பாடல்கள் |
| இலக்கிய இயக்கம் | தமிழீழ விடுதலைப் புலிகள் |
| செயற்பட்ட ஆண்டுகள் | 1970கள்-மே 2009 |
| துணைவர் | சிறீரஞ்சனி |
| பிள்ளைகள் | மாலிகா, சோபிதன், ஜீவிதன் |
| பெற்றோர் | கந்தையா வரதலிங்கம், பாக்கியம் |
| குடும்பத்தினர் | இராசலட்சுமி, சரோஜினிதேவி, தர்மகுலசிங்கம் |
புதுவை இரத்தினதுரை என அழைக்கப்படும் வரதலிங்கம் இரத்தினதுரை (பிறப்பு: திசம்பர் 3, 1948) ஈழத்துக் கவிஞரும், பாடலாசிரியரும், சிற்பக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராகப் பணியாற்றியவர்.[1][2] இவர் ஏராளமான தமிழ்த் தேசியப் புரட்சிப் பாடல்களை எழுதியுள்ளார்.[3] 2009 மே மாதத்தில் ஈழப் போர் முடிவுக்கு வந்த காலத்தில் காணாமல் போனார்.[4][5][6]
இவர் இலங்கையின் வடக்குப் பகுதி விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த போது, தமிழீழ கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளராக இருந்தார். 2016 மே 21 இல், தமிழ் கார்டியன், அவர் கடைசியாக 2009 மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தின் காவலில் காணப்பட்டதாக செய்தி வெளியிட்டது.[7][8] 2012 இல், சிங்கள திவயின நாளிதழ், இதனை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தது.[4]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]புதுவை இரத்தினதுரை யாழ்ப்பாண மாவட்டம், புத்தூரில் 1948 திசம்பர் 3 இல் சிற்பக் கலைஞர் கந்தையா வரதலிங்கம் (1916-2004), பாக்கியம் ஆகியோருக்கு இரண்டாவது மகவாகப் பிறந்தார்.[9]
கலையுலகில்
[தொகு]இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். 2004 வரை இவர் ஏறக்குறைய 600 பாடல்கள் வரையில் எழுதியுள்ளார்.[10] இவர் எழுதிய இந்த மண் எங்களின் சொந்த மண் பலரது வரவேற்பையும் பெற்ற உணர்வுபூர்வமான பாடல் ஆகும். இவர் எழுதிய பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் என்ற ஆன்மிகப் பாடலை இலங்கை இராணுவ 2014 செப்டம்பரில் ஒலிபரப்புவதற்குத் தடை செய்தது.[11]
வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்
[தொகு]- வானம் சிவக்கிறது (1970)
- இரத்த புஷ்பங்கள்(1980)
- ஒரு தோழனின் காதற் கடிதம்
- நினைவழியா நாட்கள்
- உலைக்களம்
- பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்
வெளிவந்த ஒலிநாடக்கள்
[தொகு]ஒலிநாடாக் கவிதைகள்
[தொகு]- களத்தில் மலர்ந்தவை (01.02.1989)
எழுச்சிப் பாடல் ஒலிநாடாக்கள்
[தொகு]- களத்தில் கேட்கும் கானங்கள்[12][13][14]
- கரும்புலிகள்
- முல்லைப்போர்
- ஊர்க்குயில்
- ஆனையிறவு
- கரும்புலிகள் II[15]
பக்திப் பாடல் ஒலிநாடாக்கள்
[தொகு]- நல்லை முருகன் பாடல்கள்
- திசையெங்கும் இசைவெள்ளம்
- கார்த்திகை வாசம்[16]
- துயர் வெல்லும் துணை[17][18][19][20][21]
இவற்றுள் சில.
இவர் எழுதிய பாடல்களில் சில
[தொகு]- இந்த மண் எங்களின் சொந்த மண்
- ஏறுது பார் கொடி
- தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
- பூ மலர்ந்தது கொடியினில்
- தூக்கமா கண்மணி பள்ளியெழு
- பாதைகள் வளையாது எங்கள் பயணங்கள் முடியாது
- உயிரினும் மேலான தாய்நாடு
- காற்றுக்கும் கை முளைக்கும்
- குயிலே பாடு
- சிறகு முளைத்த குருவி உனக்கு
- பூபாளம் பாடும் நேரம்
- பால்மணம் மாறாத பிஞ்சுகள்
- விண்வரும் மேகங்கள் பாடும்
- எதிரிகளின் பாசறையைத் தேடிப் போகிறோம்
- தூரம் அதிகமில்லை
- வேர்கள் வெளியினில் தெரிவதில்லை...[22]
- காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே
- இருளின் திசைகள் புலரும் வரையும் நிமிரும் மாலதி படையணி
- பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது[23]
- எழுவான் திசையில் கதிரோன் எழுவான்[23][24]
- பாடும் பறவைகள் வாருங்கள்
- மேகங்கள் இங்கு வாருங்கள்
- பரணி பாடுவோம் பரணி பாடுவோம்
- இந்திய இராணுவ புண்ணிய வான்களால்
- துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கும்
- வந்தது இந்திய ராணுவம்
- வானம் இடிந்து விழுந்திடலாம்
- யாகம் தொடங்கிவிட்டோம்
- வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகிறேன்
- வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே
- புலிவீரர் புலிவீரர் உருவாகுகின்றார்
- காற்றில் கலந்த கடற்கரும்புலிகள்
- சோழ வரலாறு மீண்டும் ஈழத்திலே பிறந்தது
- இறக்கின்ற போதும் இலட்சியங்கள் இறப்பதில்லை
- குனியாது கடல்வேங்கை ஒருநாளும்[25]
- செம்மணியின் மீதெழுந்து ஓலமிடும் சின்னச் சிட்டு[26][27][28]
- சங்கு முழங்கடா தமிழா
- பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது
- மேகம் விளையாடும் இங்கு மின்னல் பூச்சூடும்[29][30][31]
- ஆழக்கடலெங்கும் சோழமகாராஜன்[32]
- வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்[33][34]
- புதிய வரலாறு எழுதும் புலிவீரர்[35]
- கடலதை நாங்கள் வெல்லுவோம்
- முந்தியெங்கள் பரம்பரையின் கடலம்மா[35]
- அலைவந்து தாலாட்டும் சிறுதீவு[36][37]
- புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றே நீ கூறு
- வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்[38]
- பூவிழி தீசுமந்தாடட்டும்[39]
- கிழக்கு வானம் சிவக்கும் நேரம்
- இந்தக் கடல் ஈழத்தமிழரின் சொந்தக் கடல்[40][41]
- பாரில் தமிழன் படும் வேதனைகள்
- ஓட்டிகளே படகோட்டிகளே[40]
- ஊரெழுவில் பூத்தகொடி வேரிழந்தது
- வாயிலொரு நீர்த்துளியும்[42]
- வந்தபடை வாழ்வளிக்கும் என்று நம்பினோமே[43]
- நல்லூரின் வீதியெங்கும் கண்ணீரால் வெள்ளம்[44]
- நல்லைநகர் வீதியிலே நாயகனே நீ கிடந்தாய்[45]
- வருக எங்கள் மக்களே[46]
- சின்னச் சின்னக் கண்ணில்[47]
- எங்குமே மங்களம் பொங்கியே தங்கிட வந்த நல் தைப்பாவை[48]
- ஆலமரக் கிளையில் இங்கு[49]
- விழியில் சொரியும் அருவிகள்
- தென்தமிழீழமும் எங்களின் கையிலே
- நிலவில் புதிய கவிதை எழுத நிமிர்ந்த புயல்களே
- கிழக்கு வானம் சிவந்தது[50]
- ஒரு நாள் விடியும் இருளும் முடியும்[51][52]
- சின்னச் சின்னக் கூடுகட்டி நாமிருந்த ஊர் பிரிந்தோம்
- நேற்றுவரை பூமாலை இவன் வாங்கிப்போவான்[53]
- நந்திக்கடலோரம் முந்தைத் தமிழ்வீரம்[52][54]
- சூரியன் யாருக்கும் சேவகம் செய்து அவர் கால்களில் பூசைகள் செய்யாது[55][52][56]
- விடியும் திசையில் பயணம் பயணம்[57]
- மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப் பூங்குயிலே
- சுக்குநூறானது சிக்குறு
- கண்களிலே நீர்வழிந்து கங்கை எனவாச்சு
- வன்னிக்காற்றே என்னைத் தழுவி வாசல் வரையும் வீசாயோ
- சிக்குறுய் சிக்குறுய் ஜயசிக்குறுய் வந்து சில்லெடுக்கின்றது ஜயசிக்குறுய்[58][52]
- புதிய நூற்றாண்டே புதிய நூற்றாண்டே பிறந்து வா
- ஒரு கூட்டுக் கிளியாக நாமிருந்தோம்[59]
- வீரத்தின் தாகம் அடங்காது[59]
- உப்பளக்காற்றே உப்பளக்காற்றே[59]
- சின்னப்பூவே சின்னப்பூவே[59]
- வன்னிக்காட்டில் வீசிய புயலே குமுதன்[59]
- கண்டி வீதியில் காதோரம் ஒரு சண்டை[59]
- கடலோரப் பூவாக அழகாகப் பூத்தாள்[60]
- பொன்னள்ளித் தூவுது வானம்[61]
- விடியும் திசையில் ஒளிபரவிட உதயம் புலரும்[61]
- பூமியின் மேனியைப் பூவிதழால் மேவிப் போகின்ற பூங்காற்றே[62][63]
- பூவெல்லாம் பூத்திடும் நாளல்லோ வந்தது பூமிக்கு கல்யாணக் காலமடி[64]
- உறவுகள் வேரில் விடுதலை நீரை[65]
- எங்கே எங்கே வேங்கைகள் எங்கே
- தளராத துணிவோடு களமாடினாய்
- ஆனையிறவின் மேனி தடவி[28]
- வாசலிலே அந்த ஒற்றைப் பனைமரம்
- உயிர் மின்னல் கீறும் ஒரு ஓவியம்[66]
- பச்சை வயலே பனங்கடல் வெளியே[67]
- சூரியதேவனின் வேருகளே[62]
- வீரப்படை வெகு வீரப்படை கரிகாலன் வளர்த்திடும் சூரப்படை
- மேகம் வந்து கீழிறங்கி
- கல்லறைகள் விடை திறக்கும்
- விழியூறி நதியாகி விழுந்தோடும் எம்மில்
- மாமலை ஒன்று மண்ணிலே இன்று
- கூவும் குயிலொன்று பாடிப்பறந்தது
- காற்றடிக்கும் திசைகளெல்லாம்[68]
- விடுதலை எவரும் தருவதும் இல்லை[68]
- நித்திய புன்னகை அழகன்
- நித்திய வாழ்வினில் நித்திரை கொள்பவன்
- ராஜபறவை சிறகை விரித்து உயரப்போனது
- கல்லறை மேனியர் கண் திறப்பார்களே
- தாயக மண்ணே தாயக மண்ணே[69]
- வீரர்களே மாவீரர்களே உங்கள் விடுதலைக் கனவுகள் விரிகிறது
- கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்
- உலகத்தமிழர் ஒன்றாய் நின்று சபதம் எடுக்கின்றோம்[70][71]
- முலை தந்த உடல் இங்கு எரிகின்றதே[70][71]
- இது காலை விடிகின்ற நேரம்[70][71]
- மேலே போகும் முகிலை எவரும் கீழே விழுத்த முடியாது[70][71]
- வானத்திலேறியே வந்து வந்து குண்டு போட்டவன் கோட்டையிலே[72]
- வானத்தில் போயினர் எங்கள் வான்புலிகள்
- அப்புகாமி பெற்றெடுத்த லொகுபண்டா மல்லி
- "வரும் பகை திரும்பும்" ஒலிநாடாவில் உள்ள 3 பாடல்கள் ("கிட்டுப் படையணி குட்டிச் சிறியணி" பாடல் உட்பட)[71]
- மரணம் அழைத்த ரமணன் எங்கள் மனதை நிறைத்த வதனன்
- கடலம்மா கடலம்மா கலங்கிடச் செய்தது ஏனம்மா[73]
- பொழுதாகில் இருள்மூடி விரியும்[73]
- தீர்ப்பு எழுது, உலகே தீர்ப்பு எழுது[73]
- பூவாய்ச் சொரியும் புன்னகை புரியும்[74]
- கூடுகலைந்த குருவிகள், இடமாறி அலையும் அருவிகள்
- புலிமாமகன் பிரபாகரன் தலைமை போற்றி நில்லடா[75]
- விடியும் நேரம் பகைவன் தேசம் உறங்கிக் கிடந்தது
- நள்ளிராவேளையில் நாதமணி வந்து நாலுதிசையிலும் கேட்குதடி[76]
- புதிய வருடமே புதிய வருடமே
- வீரன் பேரைப் பாடியாடு காவடி[77]
- உயிராலே திலீபன் எடுத்த யாகம் வாழுதே[77]
- இடியா மழையா புயலா எதுவும் இங்கே பாடம் படிக்கும்[78]
- சீலன் புயலின் பாலன் திருக்கோணமலையின் வீரன்[78]
- தாயின் மடியில் பகைவன் தலையா, ஈழத்தமிழர் வாழ்வே இழிநிலையா[78]
- வாழ்வொன்றிங்கே வரும் நாள் வரையும் புலிகள் சேனை பணியாது[78]
- நெஞ்சினிலே பஞ்சு வைத்து எண்ணையிட்ட நெருப்பு[79]
- வானத்தில் ஓடிய மேகம் அழுதது[80]
- உடுக்கை அடிச்சு உடுக்கை அடிச்சு உருவையேத்தடா
- தாய்நிலம் மீதினில் தீயிடுவோரின் தலையெடுத்தால் அது தர்மமடா
- கடல் என்ன உனக்கென சீதனம் தந்த வளவோ
- வெண்ணிற மேகங்கள் மேனி கறுத்திடில்
இவற்றுள் சில.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காணாமல் போன புதுவை இரத்தினதுரை எங்கே?" (in Tamil). தினகரன் (இலங்கை). December 13, 2015. http://archives.thinakaran.lk/Vaaramanjari/2015/12/13/?fn=n1512138.
- ↑ "LTTE to impose dress code for Jaffna women". Sunday Times (Sri Lanka). 18 October 2005. https://www.sundaytimes.lk/020428/front/ltte.html.
- ↑ Mathi (2012-12-25). "இலங்கையின் தடுப்புக் காவலில் புதுவை இரத்தினதுரை: சிங்கள ஏடு தகவல்". tamil.oneindia.com. Retrieved 2021-11-21.
- ↑ 4.0 4.1 Mathi (December 25, 2012). "இலங்கையின் தடுப்புக் காவலில் புதுவை இரத்தினதுரை: சிங்கள ஏடு தகவல்" (in Tamil). ஒன்இந்தியா. https://tamil.oneindia.com/news/2012/12/25/srilanka-puthuvai-rathinadurai-lanka-custody-166854.html.
- ↑ "Sri Lanka: Observations of the UN Working Group on Enforced or Involuntary Disappearances • Sri Lanka Brief". https://srilankabrief.org/sri-lanka-observations-of-the-un-working-group-on-enforced-or-involuntary-disappearances/.
- ↑ "Report of the Working Group on Enforced or Involuntary Disappearances". https://www.ohchr.org/sites/default/files/Documents/HRBodies/HRCouncil/RegularSession/Session22/A.HRC.22.45_English.pdf.
- ↑ Yamuna Sangarasivam (2022). Nationalism, Terrorism, Patriotism A Speculative Ethnography of War. Springer International Publishing. p. 150, 154, 159. ISBN 9783030826659.
- ↑ "Diaspora youth group re-aligns Tamil narrative on enforced disappearances". Tamil Net. September 4, 2020. https://www.tamilnet.com/art.html?catid=79&artid=39940.
- ↑ வரதம். 2004.
- ↑ "வைகறை 2004.07.14". வைகறை. July 14, 2004. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88_2004.07.14.
- ↑ "SL military bans devotional song at ancient Saiva temple in Batticaloa". Srilanka Brief. July 21, 2014. https://srilankabrief.org/sl-military-bans-devotional-song-at-ancient-saiva-temple-in-batticaloa/.
- ↑ இந்த ஒலிநாடாவில் உள்ள "அடைக்கலம் தந்த வீடுகளே" பாடலை எழுதியவர் காசி ஆனந்தன், மற்றும் "ஏழுகடல்களும் பாடட்டும்" பாடலை எழுதியவர் இன்குலாப்.
- ↑ ஈழநாதம்-1990.03.25 பக். 14-15.
- ↑ 'தமிழீழ எழுச்சிப் பாடல்கள் - பாகம் 01' நூல்.
- ↑ இந்த ஒலிநாடாவில் உள்ள "வெஞ்சமர் கொல்லாத புலியானவன்" பாடலை எழுதியவர் பொட்டம்மான்.
- ↑ ஒரு பேப்பர் 2004.12.17 பக். 03, 18.
- ↑ "ஆக்க பாடல்கள் - Thirupathirakaliamman". https://thirunelkaaliamman.weebly.com/2950296530212965-29863006297529943021296529953021.html.
- ↑ உதயன் 2004.11.06 பக். 05.
- ↑ உதயன் 2004.11.08 பக். 02.
- ↑ உதயன் 2004.11.22 பக். 09.
- ↑ இலண்டன் தமிழர் தகவல் 2004.12 பக். 15.
- ↑ "தாயககீதங்கள்: வேர்கள் வெளியினில் தெரிவதில்லை". July 25, 2006. https://thayagageetham.blogspot.com/2006/07/blog-post_115381647303522432.html.
- ↑ 23.0 23.1 'முகங்கள்' திரைப்படம்.
- ↑ 'விடுதலைப் புலிகள்' இதழ் 41 (ஆடி 1993).
- ↑ "தாயககீதங்கள்: கடலின் காற்றே கடலின் காற்றே". May 20, 2006. https://thayagageetham.blogspot.com/2006/05/blog-post_20.html.
- ↑ 'செம்மணி' (1998) கவிதை நூல் - பக். 47.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு - டிசம்பர் 1998.
- ↑ 28.0 28.1 நிதர்சனம் ஒளிவீச்சு - ஏப்ரல் 2000.
- ↑ 'இன்னும் ஒரு நாடு' திரைப்படம்.
- ↑ 'வெளிச்சம்' இதழ் பங்குனி 1994 - பக். 01.
- ↑ 'எரிமலை' இதழ் மே 1995 - பக். 38.
- ↑ ஈழநாதம் 1993.02.05 பக். 6.
- ↑ ஈழநாதம் 1992.07.10 பக். 5-6.
- ↑ பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் பக். 21-27.
- ↑ 35.0 35.1 ஈழநாதம் 1992.07.10 பக். 5-6.
- ↑ 'வெளிச்சம்' இதழ் வைகாசி-ஆனி 1992 - பக். 35.
- ↑ 'நினைவழியா நாட்கள்' கவிதை நூல் - பக். 16.
- ↑ 'வெளிச்சம்' இதழ் மார்கழி 1993 - பக். 38.
- ↑ 'வெளிச்சம்' இதழ் சித்திரை 1993 - பக். 35.
- ↑ 40.0 40.1 'வெளிச்சம்' இதழ் புரட்டாதி 1994 - பக். 43-44.
- ↑ ஈழநாதம் 1994.09.01 பக். 5.
- ↑ ஈழநாதம் 1993.09.19 பக். 3.
- ↑ ஈழநாதம் 1993.09.21 பக். 3.
- ↑ ஈழநாதம் 1993.09.23 பக். 5.
- ↑ ஈழநாதம் 1993.09.25 பக். 5.
- ↑ 'காற்றுவெளி' திரைப்படம்.
- ↑ 'உயிர்ப்பூ' திரைப்படம்.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு - ஜனவரி 1998.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு - ஆகஸ்டு 1998.
- ↑ 'வெளிச்சம்' இதழ் புரட்டாதி 1995 - பக். 69-71.
- ↑ 'விடுதலைப் புலிகள்' இதழ் 73 (மார்கழி 1996, தை 1997).
- ↑ 52.0 52.1 52.2 52.3 'உலைக்களம்' நூல் (2003).
- ↑ 'செவ்வரத்தம்பூ' திரைப்படம்.
- ↑ 'விடுதலைப் புலிகள்' இதழ் 72 (ஐப்பசி, கார்த்திகை 1996).
- ↑ 'விடுதலைப் புலிகள்' இதழ் 77 (புரட்டாதி, ஐப்பசி 1997).
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு - ஆகஸ்டு 1997.
- ↑ ""அவர முன்னால பாத்தா சூரியன பார்த்த போல " - தாயகப் பாடகர் ஜெயராஜா சுகுமாருடன் நக்கீரன் சபை (4 mins)". https://www.youtube.com/watch?v=CRnA_ocUywc.
- ↑ 'விடுதலைப் புலிகள்' இதழ் 83 (வைகாசி 1998).
- ↑ 59.0 59.1 59.2 59.3 59.4 59.5 "தேசத்தின் புயல்கள் பாகம்-02 - Discogs". https://www.discogs.com/release/8277925-Various-தசததன-பயலகள-பகம-02?srsltid=AfmBOoqrxrGJh9jQjXVLWw82X4_WOHbHNe7W6yG3o-GNh7FKeTjkPc-l.
- ↑ 'உப்பில் உறைந்த உதிரங்கள்' திரைப்படம்.
- ↑ 61.0 61.1 'புயல் புகுந்த பூக்கள்' திரைப்படம்.
- ↑ 62.0 62.1 நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 71 (ஆகஸ்டு 1999).
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 92 (யூன் 2001).
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 90 (ஏப்ரல் 2001).
- ↑ 2002ம் ஆண்டில் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 100வது இதழ்.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு - கதிர் 105.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு - கதிர் 101.
- ↑ 68.0 68.1 தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
- ↑ 'எல்லாளன்' திரைப்படம்.
- ↑ 70.0 70.1 70.2 70.3 'ஊர்போகும் மேகங்கள்' ஒலிநாடா.
- ↑ 71.0 71.1 71.2 71.3 71.4 நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 104 (ஜனவரி-பெப்ரவரி 2004).
- ↑ "தமிழீழ விடுதலைப் பாடல்களும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும்.". 29 September 2020. https://www.ilakku.org/s-p-balasubrahmanyam-songs-of-the-tamil-eelam-liberation-struggle-oviar-pugazhenthi/.
- ↑ 73.0 73.1 73.2 "Lyrics - Isaiyarangam". https://isaiyarangam.com/lyrics/.
- ↑ திரு. வர்ணராமேஸ்வரன் இசையமைத்துப் பாடிய பாடல்.
- ↑ "தாயகத்தலைவன்" ஒலிநாடா.
- ↑ கலையும் மக்களும் 1994 நவம்பர்.
- ↑ 77.0 77.1 "Vearil Viluntha Malai Music Album Release event". https://www.aruchuna.com/details.php?image_id=2480.
- ↑ 78.0 78.1 78.2 78.3 "Lieutenant Charles Anthony Special Regiment". https://www.aruchuna.com/details.php?image_id=806.
- ↑ 'விடுதலைப் புலிகள்' இதழ் 136 (வைகாசி, ஆவணி 2007) - பக். 16.
- ↑ இசை: சிறீகுகன், பாடியவர்கள்: எஸ். ஜி. சாந்தன், ஜெயா சுகுமார், இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 01.
வெளி இணைப்புகள்
[தொகு]- 'தமிழீழ எழுச்சிப் பாடல்கள் - பாகம் 01' நூல் (1991)
- 'தமிழீழ எழுச்சிப் பாடல்கள் - பாகம் 04' நூல் (1993)
- உலைக்களம்:வியாசன் http://www.scribd.com/doc/122361060/Puthuvai-Ulaikalam-collection-1
- A poet's fearless death at Tamil Guardian
- Puthuvai Ratnathurai's Poetry collection