புதுமைக் குரல் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுமைக்குரல் கொழும்பிலிருந்து, 1966ம் ஆண்டு முதல் ஆரம்பத்தில் மாத இதழாக வெளிவந்து பின்பு மாதத்துக்கு இருமுறையாக வெளிவந்த ஓர் இதழாகும்.

ஆசிரியர்கள்[தொகு]

  • முக்தார் முஹம்மது
  • அஸ்ஹர்

பணிக்கூற்று[தொகு]

ஈழம்வாழ் இஸ்லாமியரின் இலட்சிய உரிமைக்குரல்

உள்ளடக்கம்[தொகு]

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இஸ்லாமிய கொள்கை விளக்கக் கட்டுரைகள், வினாவிடைகள், வாசகர் பக்கம், இஸ்லாமிய உலக செய்தி ஆய்வுகள் என்பன இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.