புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுப்பாக்கம் வீரஆஞ்சநேயர் கோயில் என்பது சென்னை புதுப்பாக்கம் எனுமிடத்தில் உள்ளது.[1] இக்கோயில் சுமார் 500 முதல் 1000 வருடங்களுக்கு முந்தியது.

இக்கோயில் கஜகிரி எனும் குன்றில் அமைந்துள்ளது.

தலவரலாறு[தொகு]

நாகாஸ்திரத்தால் வாரன படைகளும், லட்சுமணனும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களை உயிர்ப்பிக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மூலிகையை தேடிச் சென்றார். அங்கு சஞ்சீவி மூலிகையை அறியாமல் தவித்தார். அதனால் சஞ்சீவி மலையை பெயர்த்து தூக்கி வந்தார். அவ்வாறு வருகையில் மாலை நேரமானதால், சந்தியா வந்தனம் செய்ய புதுப்பாக்கம் இடத்தில் வந்தார். இதனால் இத்தலம் சிறப்பு மிக்கதாகும்.

திருவிழாக்கள்[தொகு]

  • அனுமன் ஜெயந்தி
  • ராமநவமி

தலசிறப்பு[தொகு]

குன்றின் மீது உள்ள ஆஞ்சநேயர் கோயில் இக்கோயிலில் 108 படிக்கட்டுகள் உள்ளன.

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவர் ஆறு அடி உயரமானவர், இந்த மூலவர் வடக்கு நோக்கி உள்ளார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Veera Anjaneyar Temple : Veera Anjaneyar Veera Anjaneyar Temple Details - Veera Anjaneyar- Pudupakkam - Tamilnadu Temple - வீரஆஞ்சநேயர்".