உள்ளடக்கத்துக்குச் செல்

புதுச்சேரி அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுச்சேரி அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம்
Map
அமைவிடம்குறிஞ்சி நகர், லாசுபேட்டை, புதுச்சேரி-605008
ஆள்கூற்று11°55′52″N 79°47′07″E / 11.9310°N 79.7852°E / 11.9310; 79.7852
வகைகுழந்தைகள் அறிவியல் மையம்
சேகரிப்பு அளவுவேடிக்கை மையம், எண்ணிம கோளரங்கம், கடல்சார் உயிரி, அறிவியல் பூங்கா
உரிமையாளர்தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை, இந்திய அரசு, புதுச்சேரி அரசு

புதுச்சேரி அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் (Puducherry Science Centre & Planetarium) புதுச்சேரி அறிவியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு பொது அறிவியல் கோளரங்கம் ஆகும். இது இந்தியாவின் ஒன்றிய பகுதியான புதுச்சேரியில் லாசுபேட்டையில் அமைந்துள்ளது. இந்த மையம் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபையினால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு மற்றும் அமைக்கப்பட்டது.[1]

அறிவியல் விளக்கப் பகுதியில், பார்வையாளர்கள் மற்றும் மாணவர்களின் குழுக்களுக்கு நேரடி விளக்கங்கள்[2] மற்றும் சோதனைகள் நடத்தப்படுகிறது. குழந்தைகள் பகுதியில் குழந்தைகளுக்கான எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கண்காட்சிகளைப் பராமரிப்பதற்கும் புதியவற்றை மேம்படுத்துவதற்கும் கருவிகள் மற்றும் தடுப்புகளுடன் கூடிய பட்டறை ஒன்று உள்ளது. இந்த வசதிக்கான மூலதனச் செலவான 375 லட்சம் ரூபாயை இந்திய அரசும் புதுச்சேரி அரசும் சமமாகப் பகிர்ந்து கொண்டன. எண்ணிம கோளரங்கத்தின் செலவை அரசே ஏற்றுக்கொண்டது. அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் 3 ஏக்கர் நிலப்பரப்பில் 1500 சதுர மீட்டர் கட்டப்பட்ட பரப்பளவைக் கொண்டுள்ளது.[3]

கடல் சார் வாழ்க்கை

[தொகு]

கடல் வாழ் உயிரினக் காட்சியகம் 300 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. கடல்சார் உயிரியல், கடல் பன்முகத்தன்மை, கடல் வளங்கள், கடல் வளங்களுக்கான அச்சுறுத்தல்கள் மற்றும் கடல் சுற்றுலா என ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது .

வேடிக்கை அறிவியல்

[தொகு]

அறிவியல் வேடிக்கைப் பிரிவு சுமார் 300 சதுர மீட்டர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மிகவும் பொழுதுபோக்கு சூழ்நிலையில் அறிவியலின் பல்வேறு அம்சங்களைத் தெரிந்துகொள்ளவும், ஆராயவும் மற்றும் அனுபவிக்கவும் வாய்ப்புகள் நிறைந்துள்ளன.

அறிவியல் பூங்கா

[தொகு]

கோளரங்கின் வெளியே, அறிவியல் பூங்கா சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஊடாடும் கண்காட்சிகளைக் கொண்டுள்ளது.

எண்ணிம கோளரங்கம்

[தொகு]

எண்ணிம கோளரங்கம் பார்வையாளர்களுக்கு வானியல் குறித்த தகவல்களைத் தெரிவிக்க வானத்தின் மாறும் காட்சியை உருவகப்படுத்துகிறது.[4]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sivaraman, R. (4 May 2015). "‘Centre committed to make UT attractive to tourists’". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/centre-committed-to-make-ut-attractive-to-tourists/article7169135.ece. பார்த்த நாள்: 16 February 2020. 
  2. Annie Philip. "Learning science to be hands-on experience". The Hindu.
  3. Staff Reporter. "A new centre to transform science education". The Hindu.
  4. Staff Reporter. "Puducherry to get a planetarium, science centre". The Hindu.