புதுக்கோட்டை ஜெ. ஜெ. கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெ. ஜெ. கல்லூரி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் சிவபுரம் என்னும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது. இக்கல்லூரியானது புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 7 கி.மீ தொலைவில் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1994 ஆம் ஆண்டு சனவரி 17 ஆம் நாள் அன்றைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் க. பொன்னுச்சாமியால் தொடங்கி வைக்கப்பட்ட கல்லூரி ஆகும். இது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுகையின்கீழ் செயல்படும் கல்லூரி ஆகும்.

நிர்வாகம்[தொகு]

இக்கல்லூரியானது கற்பக விநாயகா அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரியினை நிறுவியவர் எஸ்.ரகுபதி ஆவார். இவர் முன்னாள் தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் நகர்ப்புற அமைச்சராகவும், தற்பொழுதைய திருமயம் சட்டமன்றத்தொகுதி உறுப்பினராகவும் உள்ளார். மேலும் முன்னாள் மத்திய இணை அமைச்சராகவும் இந்திய அரசாங்கத்தில் பதவி வகித்தவர்.

கல்லூரியின் தரம்[தொகு]

1994 இல் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 2003 ஆம் ஆண்டில் தேசிய தரநிர்ணயக் குழுவினால்(NAAC) தரக்குறியீட்டில் B++ அங்கீகாரத்தை முதன்முதலில் பெற்றது. மீண்டும் 2009 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் A தரக்குறியீட்டை பெற்றது. 19.10.2012 முதல் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரியாக பல்கலைக்கழக நிர்ணயக்குழு (UGC) மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலம் அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கல்லூரி பாடப்பிரிவுகள்[தொகு]

  • இளங்கலை வகுப்புகள்
  • முதுகலை வகுப்புகள்
  • மேலாண்மை வகுப்புகள்
  • ஆய்வியல் நிறைஞர் வகுப்புகள்
  • முனைவர் பட்ட வகுப்புகள்

வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • மத்தியக் கல்விப்பாடத்திட்டத்துடன் கூடிய பள்ளி
  • மெட்ரிக் பாடத்திட்டத்துடன் கூடிய பள்ளி
  • செவிலியர் கல்லூரி
  • கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • பொறியியல் கல்லூரி