உள்ளடக்கத்துக்குச் செல்

புதுக்குடி ஊராட்சி, கடையநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடையநல்லூர் நகரத்தில் ஒட்டிய புதுக்குடி ஊராட்சி மன்றம் அமைந்துள்ளது. புதுக்குடி ஊராட்சியில் மங்களபுரம், அச்சம்பட்டி, புதுக்குடி,கண்மணியாபுரம் போன்ற சிற்றூர்கள் அமையப்பெற்றுள்ளது. தென்காசி பாராளுமன்றம் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஆகும்.[1] மேலும் செங்கோட்டை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வார்டு தொகுதிக்கு உட்பட்டதாகும். புதுக்குடி மற்றும் வேலாயுதபுரம் ஊராட்சிகளை ஒன்றினைத்து கடையநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் வார்டு தொகுதியாக உள்ளது. வருவாய் ஏடுகளில் கம்பனேரி புதுக்குடி 1 என்ற வருவாய் கிராமமாக பதியப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. செய்திப்பிரிவு (2021-04-03). "221 - கடையநல்லூர்". Hindu Tamil Thisai. Retrieved 2026-02-25.