புதுக்குடியிருப்பு பிரதேச சபை
புதுக்குடியிருப்பு பிரதேச சபை | |
|---|---|
| வகை | |
| வகை | |
| தலைமை | |
தவிசாளர் | வேலாயுதம் கரிகாலன், இலங்கைத் தமிழரசுக் கட்சி 6 மே 2025 முதல் |
உப தவிசாளர் | சுந்தரம் பரந்தாமன், இலங்கைத் தமிழரசுக் கட்சி 6 மே 2025 முதல் |
| கட்டமைப்பு | |
| உறுப்பினர்கள் | 22 |
அரசியல் குழுக்கள் | அரசு (11)
எதிர் (11) |
ஆட்சிக்காலம் | 4 ஆண்டுகள் |
| தேர்தல்கள் | |
| கலப்புத் தேர்தல் | |
அண்மைய தேர்தல் | 2025 |
| வலைத்தளம் | |
| puthukkudiyiruppu.ps.gov.lk | |
புதுக்குடியிருப்பு பிரதேச சபை (Puthukkudiyiruppu Divisional Council) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவற்றைக் கொண்ட உள்ளூராட்சி சபை ஆகும். சாலைகள், சுகாதாரம், வடிகால்கள், வீட்டுவசதி, நூலகங்கள், பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொது சேவைகளை வழங்குவதற்கு இந்தச் சபை பொறுப்பாகும். இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 10 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]
வட்டாரங்கள்
[தொகு]- விசுவமடு
- பாரதிபுரம்
- உடையார்கட்டு
- முப்புரம்
- கோம்பாவில்
- புனிதவளநகர்
- புதுக்குடியிருப்பு கிழக்கு
- முத்தையன்கட்டு
- பண்டாரவன்னி
- தண்டுவான்
- ஒட்டுசுட்டான்
- திருமுருகண்டி
தேர்தல் முடிவுகள்
[தொகு]30 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சபைக்கான தேர்தல்கள் இடம் பெறாத நிலையில் 2018 மார்ச் 28 தொடக்கம் இச்சபை மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கீழான நிர்வாகத்தில் 2023 மார்ச் 19 வரை இயங்கியது. பின்னர் மீண்டும் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு இயங்கிவந்தது.[3] 2025 மே 6 இல் தேர்தல் நடத்தப்பட்டது.
2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்
[தொகு]2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 10 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[4]
| கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் | % | வட்டாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் |
பெற்ற வாக்குகளுக்குரிய கூடுதல் உறுப்பினர்கள் |
உரித்தான முழு உறுப்பினர்களின் எண்ணிக்கை | ||
|---|---|---|---|---|---|---|---|
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு* | 11,771 | 47.18% | 11 | 0 | 11 | ||
| சுயேச்சைக் குழு | 4,463 | 17.89% | 1 | 3 | 4 | ||
| ஐக்கிய தேசியக் கட்சி | 2,857 | 11.45% | 0 | 2 | 2 | ||
| சிறீ லங்கா சுதந்திரக் கட்சி | 2,136 | 8.56% | 0 | 2 | 2 | ||
| அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 1,541 | 6.18% | 0 | 1 | 1 | ||
| தமிழர் விடுதலைக் கூட்டணி | 1,030 | 4.13% | 0 | 1 | 1 | ||
| ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 911 | 3.65% | 0 | 1 | 1 | ||
| இலங்கை பொதுசன முன்னணி | 164 | 0.66% | 0 | 0 | 0 | ||
| மக்கள் விடுதலை முன்னணி | 76 | 0.30% | 0 | 0 | 0 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 24,949 | 100.00% | 12 | 10 | 22 | ||
| செல்லாத வாக்குகள் | 459 | ||||||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 25,408 | ||||||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 33,867 | ||||||
| வாக்குவீதம் | 75.02% | ||||||
| * இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது. ** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது. | |||||||
2025 தேர்தலில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தலைவராக செல்லையா பிரேமகாந்த் (திருமுருகண்டி, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந்த் (புதுக்குடியிருப்பு கிழக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[4]
2025 உள்ளூராட்சித் தேர்தல்
[தொகு]2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[5]
| கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் | % | பெற்ற வாக்குகளுக்குரிய உறுப்பினர்கள் |
வட்டாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் |
உரித்தான முழு உறுப்பினர்களின் எண்ணிக்கை | |
|---|---|---|---|---|---|---|
| இலங்கைத் தமிழரசுக் கட்சி | 10,816 | 47.02% | 11 | 0 | 11 | |
| ஐக்கிய மக்கள் சக்தி | 1,026 | 4.46% | 0 | 1 | 1 | |
| அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 1,174 | 5.10% | 0 | 1 | 1 | |
| தேசிய மக்கள் சக்தி | 4,028 | 17.51% | 0 | 4 | 4 | |
| சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி | 2,652 | 11.53% | 1 | 1 | 2 | |
| இலங்கைத் தொழிற் கட்சி | 658 | 2.86% | 0 | 1 | 1 | |
| சுயேச்சைக் குழு | 2,491 | 10.83% | 0 | 2 | 2 | |
| மக்கள் கூட்டணி | 160 | 0.70% | 0 | 0 | 0 | |
| செல்லுபடியான வாக்குகள் | 23,005 | 100.00% | 12 | 10 | 22 | |
| செல்லாத வாக்குகள் | 554 | |||||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 23,559 | |||||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 41,212 | |||||
| வாக்குவீதம் | 57.16% | |||||
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான 2025 தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றது. அதன் தவிசாளராக முன்னாள் போராளி வேலாயுதம் கரிகாலனும், பிரதித் தவிசாளராக ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுந்தரம் பரந்தாமனும் நியமிக்கப்பட்டனர்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017.
- ↑ 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017.
- ↑ புதுக்குடியிருப்பு பிரதேச சபை
- ↑ 4.0 4.1 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
- ↑ "Local Authorities Election - 6.05.2025 Mullaitivu District Puthukkudiyiruppu Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 5 June 2025. Retrieved 5 June 2025.
- ↑ "புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்பு". வீரகேசரி. Archived from the original on 3 June 2025. Retrieved 5 June 2025.