புதுஉயிர் ஊழி
| புதுஉயிர் ஊழி | ||||||
|---|---|---|---|---|---|---|
| காலக்கோடு | ||||||
| ||||||
| முன்னையது | [[]] | |||||
| பின்னையது | [[]] | |||||
| சொற்பிறப்பு | ||||||
| Name formality | Formal | |||||
| Nickname(s) | பாலூட்டிகளின் காலம் | |||||
| தகவல்கள் | ||||||
| Celestial body | பூமி | |||||
| Regional usage | Global (ICS) | |||||
| Time scale(s) used | ICS கால அளவை | |||||
| வரைவிலக்கணம் | ||||||
| காலவரிசை அலகு | ஊழி | |||||
| பாறைஅடுக்கியல் அலகு | Erathem | |||||
| Time span formality | Formal | |||||
| Lower boundary definition | இரிடியம் அதிகமுள்ள மேலோடு, விண்வீழ்கல்லால் தோன்றியது. தொடர்ந்து K-Pg நிகழ்வு. | |||||
| Lower boundary GSSP | El Kef, தூனிசியா 36°09′13″N 8°38′55″E / 36.1537°N 8.6486°E | |||||
| Lower GSSP ratified | 1991 | |||||
| Upper boundary definition | N/A | |||||
| Upper boundary GSSP | N/A | |||||
| Upper GSSP ratified | N/A | |||||
புதுஉயிர் ஊழி / செனோசோயிக் / சீனோசோயிக் ஊழி (Cenozoic Era) என்பது புவித்தோற்ற கால அட்டவணையில், தற்போதைய காலத்தைக் குறிக்கிறது.இது சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்று வரை தொடர்கிறது. டைனோசர்களின் அழிவுக்குப் பிறகு, தொடங்கிய இந்தக் காலத்தில் மிகவும் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்து என கணித்துள்ளனர். 'சீனோசோயிக்' என்ற சொல்லுக்கு, 'புதிய உயிர்' என்று பொருள் ஆகும். பாலூட்டிகளின் காலம்: டைனோசர்கள் மறைந்த பிறகு, பாலூட்டிகள் பூமியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. சிறிய எலிகள் போன்ற உயிரினங்கள் முதல், இன்றைய பெரி யானைகள், திமிங்கலங்கள், பறவைகள் பரிணாமம் அடைந்தன. கண்டங்களின் நகர்வு மெதுவாக நிகழ்ந்து, நிலப்பரப்பு நிலையை அடைந்தன. குறிப்பாக, இந்தியத் தட்டு, ஆசியத் தட்டுடன் மோதியதால் இமயமலைத்தொடர் உருவானது, இந்தக் காலத்தின் முக்கிய நிகழ்வாகும். இந்த ஊழியானது, மேலும் மூன்று காலங்களாகப் (Paleogene, Neogene, Quaternary) பிரிக்கப்படுகிறது. இந்த ஊழியின் தொடக்கத்தில், பூமியானது மிகவும் வெப்பமாக இருந்தது. ஆனால், காலம் செல்லச் செல்ல புவி குளிர்ந்து துருவங்களில் பனிப்பாறைகள் உருவாகத் தொடங்கின. அதானல் தாவரங்கள், விலங்குகளின் பரவலில் பெரும் மாற்றங்கள் உருவானது.