புதிர்ப் பாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிர் பாடல்கள் என்பது பாடல்களில் புதிர் முறையிலான கேள்விகளைப் பாடல்களாகக் கூறி அதற்கு விட கோருவதாக இருக்கும்.

சில பாடல்கள்[தொகு]

பாடல்: 1

டா டா டா டா டா டா அது

டா டா டா டா டா டா டா டா டா டா மாட்டை

- இதில் முதல்வரியில் ஆறுடா உள்ளது. இரண்டாவது வரியில் பத்து டா உள்ளது.

அதாவது ஆறுடா அது, பத்துடா மாட்டை என்பது ஆறடா அங்கே பத்துடா மாட்டை என்பது போன்று சிறுவர் விளையாட்டுப் புதிர்ப் பாடல்கள் உள்ளன.

பாடல்:2

தலையில் எட்டு

இடையில் ஐந்து

கடையில் மை

எல்லாம் சேர்ந்தால் மேன்மை அஃது என்ன?

இதற்கு விடை “அருமை”.

பாடல்:3

ஈராறும் ஈரறையும் இல்லையென்றேன் ஆதலினால்

ஈராறு செல்லாது இருந்தீரே - ஈராறு

கட்டி அணைத்தேநீ காதலுடன் சேர்ந்தாலே

வட்டியுடன் தானே வரும்.

இதற்கு என்ன பொருள் தெரியுமா?

2 x 6 = 12 + 2 x 1/2 = 12 + 1 = 13

13 ஆவது நட்சத்திரமாகிய அத்தம் (பொருள்)

2 x 6 = 12 ஆவது நட்சத்திரமாகிய உத்திரம் (மறுமொழி)

2 x 6 = 12 ஆண்டில் பன்னிரண்டாவதான வெகுதான்ய (நெல்)

நட்சத்திரக் கணக்கு போடுவது போல இப்பாட்டின் ஆசிரியர் சுந்தரக் கவிராயர், செல்வர் இயல்பை வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடிக் காட்டுகிறார்.

பதின்மூன்று நட்சத்திரமாகிய அத்தம் (அதாவது பொருள்) என்னிடத்தில் இல்லையென்று நான் சொன்னபடியால் பன்னிரண்டாவது நட்சத்திரமாகிய உத்திரம் (மறுமொழி) உரையாது இருந்தீரே. ஆண்டில் பன்னிரண்டாவதாகிய வெகுதான்யத்தை (மிகுந்த நெல்லை) மூட்டை மூட்டையாகக் கட்டி அவற்றை ஆசையுடனே சேர்த்து வைத்தால் பொருள் வட்டியுடன் தானே வரும் என்பது இப்பாட்டின் பொருள்.

பாடல்:4

”முற்பாதி போய்விட்டால் இருட்டேயாகும்

முன் எழுத்து இல்லாவிட்டால் பெண்ணேயாகும்.

பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம்

பிற்பாதியுடன் முன் எழுத்து இருந்தால் மேகம்

சொற்பாகக் கடைதலைசின் மிருகத் தீனி

தொடர் இரண்டாம் எழுத்து மாதத்தில் முதலாம்

பொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா

புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே.”

என்பது அழகிய சொக்கநாதப் பிள்ளை என்பவர் எழுதிய பாடல். இப்பாடலில் விடை கண்டறியும் வகையில் விடைகள் இலைமறை காயாக அமைத்துப் பாடல் இயற்றப்பட்டுள்ளது. இப்பாடலின் விடை: புதையல் என்பதையும் முடிவில் தெரிவித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிர்ப்_பாடல்கள்&oldid=2238217" இலிருந்து மீள்விக்கப்பட்டது