புதிய இறைமறுப்பு
பகுதி |
இறைமறுப்பு |
---|
|
புதிய இறைமறுப்பு (New Atheism) என்பது 21 ம் நூற்றாண்டில் மேற்குலகில் வளர்ச்சி பெற்ற ஒரு சமூக இயக்கம் ஆகும்.[1][2] இந்த இயக்கத்தின் தோற்றம் உக்கிரம் பெற்றுவந்த சமயத் தீவரவாதிகளுக்கு எதிராக செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்ட கடுமையான தெளிவான எதிர்ப்பில் இருக்கிறது. நூல்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்கள் என பல்வேறு வழிகளில் சமயத் தீவரவாதத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர், தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். சாம் ஃகாரிசு, ரிச்சர்ட் டாக்கின்சு, கிறித்தபர் ஃகிச்சின்சு, விக்டர் இசுடெங்கர், டேனியல் டென்னட் ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் காரிசு, டாக்கின்சு, ஃகிச்சின்சு, டென்னட் ஆகியோர் இறைமறுப்பின் ”நான்கு குதிரைவீரர்கள்” (The four horsemen) என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். சமய அடிப்படைவாதத்திற்கு சிறிதளவும் இடமோ புரிதலோ அளிக்காமல் கடுமையாக எதிர்ப்பது புதிய இறைமறுப்பின் பாணி ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lee, Lois; Bullivant, Stephen (2016-11-17). A Dictionary of Atheism (in ஆங்கிலம்). Oxford University Press. ISBN 978-0-19-252013-5.
- ↑ Wolf, Gary (November 1, 2006). "The Church of the Non-Believers". Wired (in அமெரிக்க ஆங்கிலம்). ISSN 1059-1028. Retrieved 2023-01-19.