புதியகாலம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதியகாலம் சமகால தமிழ் எழுத்தாளர்களை மதிப்பிட்டும் விமர்சனம் செய்தும் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 2008ல் உயிர்மை பதிப்பகம் இதை வெளியிட்டது

உள்ளடக்கம்[தொகு]

’இலக்கிய விமரிசனம் என்பது இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியே. ஆனால் நாம் நமது முன்னோடிகளைப் பற்றிப் பேசும் அளவுக்குச் சமகால இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதில்லை. ஆகவே சமகாலத்து எழுத்தாளர்களைப்பற்றிய நமது பார்வை எப்போதும் மங்கலாகவே இருக்கிறது’ என்கிறார் ஜெயமோகன்

இந்நூல் சமகாலத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை விமரிசனப்பார்வையில் அணுகி அவர்களை புரிந்துகொள்ள முயல்கிறது. அவர்களை சூழலிலும் மரபிலும் வைத்து பரிசீலிக்கிறது. எஸ். ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், சு. வெங்கடேசன், எம். கோபாலகிருஷ்ணன், ஜோ டி குரூஸ், கண்மணி குணசேகரன், சாரு நிவேதிதா, சு. வேணுகோபால் போன்றவர்களைப்பற்றிய கட்டுரைகள் இதில் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதியகாலம்_(நூல்)&oldid=2078113" இருந்து மீள்விக்கப்பட்டது