புதர் வானம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதர் வானம்பாடி
M affinis.jpg
A juvenile near Bangalore, India
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பறவைகள்
வரிசை: Passeriformes
குடும்பம்: Alaudidae
பேரினம்: Mirafra
இனம்: M. affinis
இருசொற் பெயரீடு
Mirafra affinis
Blyth, 1845
MirafraMap.svg
range in bright green
வேறு பெயர்கள்
  • Mirafra assamica affinis

புதர் வானம்பாடியானது Jerdon's bush lark (Mirafra affinis) அல்லது Jerdon's lark என்று அழைக்கப்படுகிறது,இது தெற்கு ஆசியாவில் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும்.

பெயர்கள்[தொகு]

தமிழில் :புதர் வானம்பாடி

ஆங்கிலப்பெயர் :Jerdon's Bush lark

அறிவியல் பெயர் :Mirafra affinis [2]

உடலமைப்பு[தொகு]

15 செ.மீ- உடலின் மேற்பகுதி செம்பழுப்பாக கருப்புக் கீற்றுக்களுடன் காணப்படும். பறக்கும்போது இறக்கைகளின் செம்பழுப்பு பளிச்செனத் தெரியும். வெளிர் பழுப்பு நிற மார்பில் சிறு முக்கோண வடிவிலான பழுப்புத் திட்டுகள் இருக்கும்.

பெரிய புதர் வானம்பாடி

காணப்படும் பகுதிகள் ,உணவு[தொகு]

தமிழகம் எங்கும் புஞ்சை, நஞ்சை விளைநிலங்களிலும் புல்லும் புதருமான தரிசு நிலங்களிலும் காணலாம். தனது உடல் நிறத்தோடு ஒட்டி அமைகின்ற செஞ்சரள் கற்களோடு கூடிய செம்மண் நிலத்திலேயே அதிகம் காணக்கூடியது. தரையில் ஓடியபடி புல்விதைகள், வண்டு, புழு பூச்சிகளை இரையாகத் தேடும். புதர்களின் உச்சி, பாறை, தந்திக் கம்பி ஆகியவற்றில் அமர்ந்திருக்கும். ஆண் பறவை திடீரென இறக்கை விரித்து எழுந்து செங்குத்தாக 10மீ உயரம் வரை சுவீர்.. சுவீர்.. சுவீர்.. என மென்குரலில் பாடியபடி சென்று பின் சுற்றிச் சுழன்றபடி கீழே வந்து முன் இருந்த இடத்தில் அமரும். இனப்பெருக்க காலத்தில் நாள் முழுதும் சில மணித்துளிக்கொரு முறை இப்படிப் பாடிப் பறந்தபடி இருக்கும். [3]

இனப்பெருக்கம்[தொகு]

டிசம்பர் முதல் மே முடிய தரையில் கால்நடைகளின் குளம்பு ஏற்படுத்திய குழிவில் கோப்பை வடிவில் கூடமைத்து 3 முதல் 4 முட்டைகள் இடும்.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mirafra affinis
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mirafra affinis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. "புதர் வானம்பாடி Mirafra affinis". பார்த்த நாள் 17 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:101
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதர்_வானம்பாடி&oldid=2461073" இருந்து மீள்விக்கப்பட்டது