புதர்பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதர்பறவை
Atrichornis-clamosus.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பாசெரிபார்மிசு
குடும்பம்: அட்ரிகோர்னிதிடே
பேரினம்: அட்ரிகோரினிசு
இசுடென்ஜெர், 1885
சிற்றினம்
  • அட்ரிகோரினிசு ரூபெசுசென்சு
  • அட்ரிகோரினிசு கிளாமோசசு

புதர்பறவை (Scrubbird) என்பது கூச்ச சுபாபமுடைய, நிலத்தில் மறைந்து வாழக்கூடிய பறவைகளாகும். இவை அட்ரிகோர்னிதிடே குடும்பத்தினைச் சார்ந்தவை. இவற்றில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. சிவப்பு புதர்பறவை என்பது அரிதான, குறுகிய வரம்பில் வாழக்கூடியன. மேலும் சத்தமிடும் புதர்பறவை மிகவும் அரிதானது. 1961 வரை இது அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. இந்த இரண்டு சிற்றினங்களும் தென்மேற்கு ஆத்திரேலியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.

புதர்பறவைக் குடும்பம் பழமையானது, மேலும் இவை யாழ் பறவைகளுடன் மிக நெருக்கமாக தொடர்புடையது. அநேகமாக தோட்டப்பறவையுடனும் மரமோடிப் புள்ளுடன் இவைத் தொடர்புடையன. புதர்பறவையின், நான்கு குடும்பங்களும் ஆஸ்திரேலியா-நியூ கினியா பிராந்தியத்தில் பரிணாம வளர்ச்சியின் காரணமாகப் பரவிக்காணப்படுகின்றன. .

1962ஆம் ஆண்டில் ஒலியெழுப்பும் புதர்ப்பறவைகளின் எண்ணிக்கை 40 முதல் 45 என மதிப்பிடப்பட்டது. பாதுகாப்பு முயற்சிகள் காரணமாக இவற்றின் எண்ணிக்கை 1980களின் நடுப்பகுதியில் சுமார் 400ஆக உயர்ந்தது. பறவைகளின் இனத் தொகையை அதிகரிப்பதில் வெற்றி பின்னர் மீண்டும் இவற்றை பல இடங்களில் அறிமுகப்படுத்தினர். ஆனாலும் 2002ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆபத்துக்குள்ளான சிற்றினமானது. 2002ன் நிலவரப்படி இந்தப் பறவைகளின் எண்ணிக்கை சுமார் 1,200 ஆகும்.

விளக்கம்[தொகு]

இரு சிற்றினப் பறவைகளும் பொதுவாக ஒரே அளவிலானவை. சாதாரண இசுடார்லிங் அளவில் காணப்படும் இப்பறவைகள் சுமார் 20 செ.மீ. நீளமுடையன. மந்தமான பழுப்பு மற்றும் கறுப்பு நிற முடையன. சிவப்பு புதர்பறவை மிதவெப்ப மண்டல மழைக்காடுகளில், குயின்ஸ்லாந்து - நியூ சவுத் வேல்ஸ் எல்லைக்கு அருகில் காணப்படுகின்றன. இவை அடர்த்தியான ஒலியெழுப்பும் புதர்ப்பறவை ஹீத்ஸ் மற்றும் ஸ்க்ரப்பி கல்லிகளில் கடலோரத்தில் மேற்கு ஒலியெலுப்பும் புதர்பறவை கடலோர மேற்கு ஆஸ்திரேலியாவில் ஹீத்ஸ் மற்றும் புதர் கல்லிகள் பகுதிகளில் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக சறுக்கி கொண்டு, மறைவின் கீழ் வாழ்கின்றன. இவை வேகமாக ஓடக்கூடியன; ஆனால் பறப்பதில் பலவீனமாவை.

ஆண் பறவைகளின் ஒலி சக்திவாய்ந்தவை. ரிங்கிங் மற்றும் மெட்டாலிக், ஒரு வென்ட்ரிலோக்வியல் தரத்துடன், அதிக தூரத்திலிருந்தும் கேட்கக்கூடிய அளவிலிருக்கும். அருகிலிருந்து கேட்கும்போது வலியுடையாத இருக்கும். பெண் பறவைகள் குவிமாட கூடுகளை நிலத்திற்கு அருகில் கட்டி, குஞ்சுகளை வளர்ப்பதில் முழு நேரத்தினையும் செலவிடுகின்றன.

அட்ரிகோர்னிதிடே இனங்கள்[தொகு]

படம் உயிரியல் பெயர் பொது பெயர் பரவல்
Atrichorne.roux.jpg அட்ரிகோரினிசு ரூபெசுசென்சு சிவப்பு புதர்பறவை வடகிழக்கு நியூ சவுத் வேல்ஸ், தென்கிழக்கு குயின்ஸ்லாந்து
Atrichornis-clamosus.jpg அட்ரிகோரினிசு கிளாமோசசு ஒலியெழுப்பும் புதர்பறவை மேற்கு ஆத்திரேலியாவில் அல்பானிக்கு கிழக்கே

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதர்பறவை&oldid=3179882" இருந்து மீள்விக்கப்பட்டது