புண்ணியகோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புண்ணியகோடி
Punyakoti
இயக்கம்இரவிசங்கர் வெங்கடேசுவரன்
தயாரிப்புசிந்து எசு கே
கதைஇரவிசங்கர் வெங்கடேசுவரன்
அன்வர் அலி (வசனம்)
இசைஇளையராஜா
நடிப்பு
படத்தொகுப்புமனோஜ் கனோத்
கலையகம்பொம்மலாட்ட ஊடகம்
வெளியீடுமார்ச்சு 25, 2020 (2020-03-25)
ஓட்டம்85 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிசமசுகிருதம்

புண்ணியகோடி ( transl.மேன்மையான செயல்), எ ட்ரூத்ஃபுல் மதர் என்றும் வெளியிடப்பட்டது 2020ஆம் ஆண்டு இரவிசங்கர் வெங்கடேசுவரன் இயக்கிய இந்திய சமசுகிருத மொழி இயங்குபடம் .[1][2] இது சமசுகிருத மொழியில் வெளியான முதல் இயங்குபடம் ஆகும்.

புண்யகோடி என்பது இரவிசங்கர் எழுதிய குழந்தைகளுக்கான கதையாக வெளிவந்த புத்தகத்தின் தழுவலாகும்.[3] கூட்டவழி மூலம் பெறுதல் முறையில் இப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் 18 மார்ச் 2020 அன்று இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் சான்றிதழைப் பெற்றது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இதன் திரையரங்கு வெளியீடு நிறுத்தப்பட்டது. இறுதியாக சமசுகிருத பாரதி திரைப்படத்தை இணையவழி விமியோ மூலம் 25 மார்ச் 2020 அன்று திரையிடப்பட்டது. மேலும் நெற்ஃபிளிக்சு 31 மார்ச் 2020 அன்று இந்தப் படத்தை இதன் திரைப்படப் பட்டியலில் சேர்த்தது.

சுருக்கம்[தொகு]

எப்பொழுதும் உண்மையைப் பேசும் ஒரு பசுவைப் பற்றி கன்னட மொழியில் எழுதிய கர்நாடகாவின் பிரபலமான நாட்டுப்புறப் பாடலை அடிப்படையாகக் கொண்டது புண்யகோடி. இக்கதை மனித-விலங்கு மோதலைச் சித்தரிக்கும் வடிவத்தில் பொழுதுபோக்கு மற்றும் தகவல். நேர்மை மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்வு என்ற செய்தியை அடிப்படையாக கொண்டது. வேதகாலத்தில் காவிரி ஆற்றின் கரையோரமாக இருந்த கருநாடு கிராமத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற பாடலின் மூல ஆதாரம் பத்ம புராணத்தின் ஸ்ரீஷ்டிகண்டின் பதினெட்டாவது அத்தியாயம் ஆகும்.

நடிகர்கள்[தொகு]

  • புண்யகோடியாக ரேவதி
  • கலிங்கனாக ரோஜர் நாராயண் [4]
  • சினேகா ரவிசங்கர்
  • எஸ். ஆர். லீலா
  • வித்யா சங்கர்

வெளியீடு[தொகு]

புண்யகோடி முதலில் 2016-ல் வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் 2018-க்கு தாமதமானது.[1][5] இப்படம் 2019 திரைப்பட சந்தையில் திரையிடப்பட்டது.[6] இது திரைப்படமாக ஏப்ரல் 2020-ல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று நெற்ஃபிளிக்சில் எண்ணிம முறையில் வெளியிடப்பட்டது.[5][6]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "India's First Sanskrit Animation Film has 30 Animators working on it and Ilaiyaraaja's Music". thebetterindia. 2015-06-16. பார்க்கப்பட்ட நாள் 2015-06-18."India's First Sanskrit Animation Film has 30 Animators working on it and Ilaiyaraaja's Music". thebetterindia. 16 June 2015.
  2. "Bengalurean gives Kannada folk song animated avatar in Sanskrit". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 June 2018. பார்க்கப்பட்ட நாள் 13 June 2018.
  3. "First Sanskrit animation movie to crowd-source content". thehindu. 2014-11-18. பார்க்கப்பட்ட நாள் 2015-06-18.
  4. K., Bhumika (24 March 2016). "Making the U-turn home". தி இந்து.
  5. 5.0 5.1 Govind, Ranjani (27 March 2020). "Watch the first Sanskrit animation film 'Punyakoti' at home". தி இந்து (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
  6. 6.0 6.1 "Industry Screenings 2019". Issuu.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புண்ணியகோடி&oldid=3767330" இலிருந்து மீள்விக்கப்பட்டது