உள்ளடக்கத்துக்குச் செல்

புண்ணாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்தபின் கிடைக்கும் மீதம் உள்ள சக்கைப் பொருளே புண்ணாக்கு ஆகும்.

தேங்காய்ப் புண்ணாக்கு

[தொகு]

புண்ணாக்கு தேங்காயிலிருந்து செய்யப்படும் ஓர் உணவுப் பொருளாகும். பொதுவாக இது மாடுகளுக்கு உணவாகக் கொடுக்கப்படுகிறது. சில உணவகங்களில் தேங்காய்க்குப் பதிலாக தேங்காய் புண்ணாக்கைப் பயன்படுத்தி தேங்காய் சட்டினியும் செய்கிறார்கள்.

கடலைப் புண்ணாக்கு

[தொகு]

நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துத் தாவரங்களிலிருந்து எண்ணெய் எடுத்தபின் நமக்கு கடலை புண்ணாக்கு கிடைக்கிறது.

எள்ளுப் புண்ணாக்கு

[தொகு]

எள்ளை ஆட்டி நல்லெண்ணெய் எடுப்பார்கள். அப்போது அதில் மிஞ்சியிருக்கும் பொருளே எள் புண்ணாக்கு ஆகும்.

புண்ணாக்கின் பயன்பாடு

[தொகு]

பொதுவாக புண்ணாக்கு மாட்டுத்தீவனமாக உபயோகப் படுத்தப்படுகிறது. பால் கறக்கும் மாடுகளுக்கு பருத்தி கொட்டையும் புண்ணாக்கும் கலந்து கொடுப்பது வழக்கமாகும்.

இவற்றையும் காணவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புண்ணாக்கு&oldid=3397689" இலிருந்து மீள்விக்கப்பட்டது