புணே மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகாராட்டிரா மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த புணே மண்டலம் (பச்சை நிறம்) மற்றும் அதன் 5 மாவட்டங்கள்

புணே மண்டலம் , கோலாப்பூர் மாவட்டம், புணே மாவட்டம், சதாரா மாவட்டம், சாங்குலி மாவட்டம் மற்றும் சோலாப்பூர் மாவட்டம் என 5 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.

புணே மண்டலம்[தொகு]

இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்றாகும்.[1] இந்த மண்டலத்தின் எல்லைகளாக மேற்கில் கொங்கண் மண்டலமும், வடக்கே நாசிக் மண்டலமும், கிழக்கே ஔரங்காபாத் மண்டலம் (மராத்வாடா)வும், தெற்கே கர்நாடகமாநிலமும் அமைந்துள்ளன.

சில புள்ளிவிவரங்கள்[தொகு]

  • பரப்பளவு: 58,268 கிமீ²
  • மக்கட்தொகை (2001 கணக்கெடுப்பு): 19,973,761
  • மாவட்டங்கள்: கோலாப்பூர், புணே, சாங்கிலி, சோலாப்பூர்
  • படிப்பறிவு: 76.95%
  • பாசன பரப்பு: 8,896 கிமீ²
  • முக்கியப் பயிர்கள்: சோளம்,கம்பு,கரும்பு,கோதுமை,அரிசி,சோயா, வெங்காயம், நிலக்கடலை, காய்கறிகள், மஞ்சள், திராட்சை, மாதுளை

2013 ஆண்டில் மாநில சராசரியை விட கூடுதலாக பள்ளி இறுதித் தேர்வில் 81.91 விழுக்காடு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.[2]

வரலாறு[தொகு]

இந்திய விடுதலைக்குப் பின்னரும் மகாராட்டிரம் உருவானபின்னரும் மாவட்டங்களின் பெயர்களில் மாற்றமும் சில சேர்க்கைகளும் உண்டாயின. சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்:

மேற்சான்றுகள்[தொகு]

  1. "மகாராட்டிர மாவட்டங்களும் மண்டலங்களும் (மராட்டி)". மகாராட்டிர அரசு. பார்த்த நாள் 9 சூன் 2014.
  2. "At 81.91,Pune division pass percentage higher than state’s". இந்தியன் எக்சுபிரசு (மே 31, 2013). பார்த்த நாள் 9 சூன் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புணே_மண்டலம்&oldid=3022462" இருந்து மீள்விக்கப்பட்டது