புட்ப விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புட்ப விதி என்னும் நூல் கமலை ஞானப்பிரகாசர் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
திருவாரூரில் வாழ்ந்த உலகநாதன் என்பவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இது இயற்றப்பட்டது.

  • இந்த நூல் புட்ப மாலை எனவும் வழங்கப்படுகிறது.
  • பூக்களைக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப் பாகுபடுத்திக்கொண்டு அவற்றால் பூசை செய்யும் முறையைக் கூறுகிறது.
  • வில்வம், துளசி, இளநீர், புல்வகை, முதலானவற்றின் பலன்களும் சொல்லப்படுகின்றன.
  • இன்னின்ன பூக்கள் இன்னின்ன தெய்வங்களுக்கு உரியவை, இவையிவை தகாதவை எனக் கூறுகிறது.
    • (பூசனைக்கு இத்தகைய பாகுபாடு தேவையற்றது எனப் பலர் கருதுகின்றனர்.)

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=புட்ப_விதி&oldid=1121412" இலிருந்து மீள்விக்கப்பட்டது