புஞ்சாக் பெர்தானா
புஞ்சாக் பெர்தானா | |
|---|---|
| Puncak Perdana | |
புஞ்சாக் பெர்தானா புறநகர் | |
| ஆள்கூறுகள்: 3°8′7.69″N 101°29′36.4″E / 3.1354694°N 101.493444°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | சா ஆலாம் |
| நிர்வாக மையம் | சா ஆலாம் |
| உருவாக்கம் | 1996 |
| அரசு | |
| • ஊராட்சி | சா ஆலாம் மாநகராட்சி |
| நேர வலயம் | மலேசிய நேரம் 08:00 |
| அஞ்சல் குறியீடு | 40170[1] |
| தொலைபேசி | +603-5543 |
| போக்குவரத்து | B |
| இணையதளம் | mpks |
புஞ்சாக் பெர்தானா, (மலாய்; ஆங்கிலம்: Puncak Perdana; சீனம்: 黄金峰); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், சா ஆலாம் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரியம் ஆகும். இந்த நகரியம் புக்கிட் செராக்காவில் 240 எக்டேர் பரப்பளவில் சுபாங் ஏரிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் உருவாக்கப்பட்டது.[2]
இது மேரு (Meru) மற்றும் சுபாங் வானூர்தி நிலையம் ஆகிய இடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. அத்துடன் செத்தியா ஆலாம் (Setia Alam) நகரத்திற்கு அருகிலும் உள்ளது.
கட்டுமானம்
[தொகு]இந்த நகரத்தின் அசல் உருவாக்குநர் சென்ட்ரல் சேலஞ்சர் நிறுவனம் (Central Challenger Sdn Bhd) ஆகும். இந்த நிறுவனம் புஞ்சாக் நியாகா குழுமத்திற்குச் சொந்தமானது. இந்த நகரம் மூன்று கட்டத் திட்டமாக அக்டோபர் 1996-இல் கட்டப்பட்டது. இமுதல் கட்டம் நவம்பர் 1996 இல் தொடங்கியது.[2] இது புத்ராஜெயா போன்ற ஒரு பல்லூட நகரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வசதிகள்
[தொகு]இந்த நகரத்தில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UiTM) (Universiti Teknologi MARA) புஞ்சாக் ஆலாம் வளாகம் உள்ளது. 4.39 கிமீ² பரப்பளவைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம் 2009-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[3]
இந்தப் பல்கலைக்கழகத்தில் 40,000 மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். மேலும், இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மலேசியா முழுவதும் மேலும் 34 வளாகங்கள் உள்ளன. இதன் அருகில், மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக மருத்துவமனையும் (UiTM University Hospital) உள்ளது.[4]
போக்குவரத்து
[தொகு]மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புஞ்சாக் பெர்தானா பகுதிக்கு சா ஆலாம் செக்சன் 13 வழியாகச் செல்லலாம். இதற்கு ரேபிட் கேஎல்
754 பேருந்து சேவை நடைமுறையில் உள்ளது.
இந்தப் பேருந்து தாமான் துன் டாக்டர் இசுமாயில் குடியிருப்பு பகுதியையும் கடந்து செல்லும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Taman Puncak Perdana, Shah Alam - Postcode - 40170 - Malaysia Postcode". postcode.my. Retrieved 2 November 2025.
- ↑ 2.0 2.1 "High-tech multimedia city coming up". New Straits Times. 2 October 1996. https://news.google.com/newspapers?nid=x8G803Bi31IC&dat=19961002&printsec=frontpage.
- ↑ "Puncak Alam Township". Puncak Alam Official Website. Retrieved 11 July 2024.
- ↑ "My MustAreKim Blog: Bandar Puncak Alam : Bandar Idamanku". January 23, 2014.
- ↑ "MyRapid - Bus Kiosk | 754". ரேபிட் கேஎல் (in ஆங்கிலம்). 27 June 2022. Retrieved 27 June 2022.
மேலும் காண்க
[தொகு]- சுபாங்
- புஞ்சாக் ஆலாம்
- தாமான் துன் டாக்டர் இசுமாயில்
- மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
- சுபாங் வானூர்தி நிலையம்
