புங்கணூர் பசு

புங்கணூர் பசு, ஒரு வகையான பசு இனமாகும். இப்பசுவின் பிறப்பிடம் சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஆகும். இந்த வகைப் பசுவின் பால் அதிக கொழுப்புச் சத்துக் கொண்டது. இதன் பாலில் அதிக மருத்துவ குணம் உள்ளதாக நம்பப்படுகிறது. பொதுவாகப் பசும்பாலில் 3.5 முதல் 4 சதவீதம் வரையான கொழுப்புச் சத்துதான் இருக்கும். ஆனால் இந்தப் புங்கணூர் பசுவின் பால் எருமைப் பாலைப் போல் 8 % கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ளது[1].
புங்கணூர் பசுக்கள் வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களில் காணப்படுகின்றன. இதன் சராசரி உயரம் 70 - 90 செ.மீ ஆகும். இதன் எடை 115-200 கிலோ ஆகும். இது ஒரு நாளைக்கு சராசரியாக 3 முதல் 5 லிட்டர் பால் தரவல்லது. இது ஒரு நாளுக்கு 5 கிலோ தீவனம் சாப்பிடும்.
குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ Chandrashekhar, B. (18 November 2011). "Punganur cow a craze among the rich". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Hyderabad/article2636547.ece?homepage=true. பார்த்த நாள்: 19 November 2011.
- "May 22: India at a glance". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 29 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111129194706/http://www.hindustantimes.com/photos-news/Photos-India/may22indiatoday/Article4-700618.aspx. பார்த்த நாள்: 19 November 2011.
- "VIPs choose to rear the Punganur cow". Flash News Today. 12 April 2011 இம் மூலத்தில் இருந்து 22 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120422182949/http://flashnewstoday.com/index.php/vips-choose-to-rear-the-punganur-cow/. பார்த்த நாள்: 19 November 2011.