உள்ளடக்கத்துக்குச் செல்

புக்ராயான் தொடருந்து விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புக்ராயான் தொடருந்து விபத்து (Pukhrayan train derailment) என்பது 20 நவம்பர் 2016 அன்று, இந்தூர் - இராஜேந்திர நகர் விரைவு வண்டி தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தினைக் குறிக்கும். இந்தூர் நகரிலிருந்து பாட்னா நகருக்கு சென்று கொண்டிருக்கும்போது அதிகாலை 3 மணி அளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் சுமார் 130 பேர் உயிரிழந்தனர்; 200 பேர் காயமடைந்தனர்.[1][2][3] இராசேந்திர நகர் தொடருந்து நிலையம் பாட்னா நகரின் மையத்தில் உள்ளது. இவ்விபத்தில் 14 பெட்டிகள் தடம் புரண்டன. புக்ராயான் கான்பூர் நகரிலிருந்து 65 கிமீ தொலைவில் உள்ளது. அதிக உயிர் சேதம் எசு 1, எசு 2 என்ற இரு தூங்கும் வசதியுடைய பெட்டிகளில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.[4][5]

உத்திரப் பிரதேசத்தில் நடந்த தொடருந்து விபத்துகளில், இந்த விபத்து மோசமான விபத்தாகும். இது 2010ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்திலுள்ள மேற்கு மிட்னாபூரில் நடந்த ஜானேசுவரி விரைவு தொடருந்தின் விபத்திற்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்டுள்ள மோசமான விபத்தாகும். விபத்தில் இறந்த பெரும்பாலானவர்கள் உத்திரப் பிரதேசத்தையும், மத்தியப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள்.

இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி 2 இலட்சமும், தொடருந்துத் துறை 2 இலட்சமும் காயமுற்றவர்களுக்கு 50 ஆயிரமும் சிறு காயமுற்றவர்களுக்கு 25 ஆயிரமும் (இது இரயில்வே ஆணையம் வழங்குவது அல்லாமல்), உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேசு யாதவ் 5 இலட்சமும், மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஃகான் 2 இலட்சமும், பீகார் முதல்வர் நிதிசு குமார் (பீகார் மக்கள் இறந்திருந்தால் காயமுற்று இருந்தால்) 2 இலட்சமும் காயமுற்றவர்களுக்கு 50 ஆயிரமும் அறிவித்தார்கள்.[6]

உடனடியாக காயமுற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட 5,000 ரூபாயில், அண்மையில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 ரூபாய்கள் இருந்தன என குற்றம் சாட்டப்பட்டது.[7]

விசாரணைகள்[தொகு]

தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் காரணமாக தொடருந்து தடம்புரண்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணை தெரிவித்தது.[8] தொடருந்தில் அளவுக்கதிகமான மக்கள் பயணித்ததாகவும் அறியப்பட்டது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indore Patna Express derails: Over 120 killed, Suresh Prabhu to reach accident spot". தி இந்தியன் எக்சுபிரசு. 20 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2016.
  2. "Dozens killed as train derails near Kanpur, India". பிபிசி செய்திகள். பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2016.
  3. "Indore-Patna express train derails in Kanpur: 96 killed, over 100 injured". இந்தியா டைம்சு. Archived from the original on 2016-11-20. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2016.
  4. "120 Dead After Indore-Patna Express Derails In Train Accident Near Kanpur Today". NDTV. http://www.ndtv.com/india-news/10-dead-after-patna-indore-express-derails-near-kanpur-1627673. பார்த்த நாள்: 20 November 2016. 
  5. "Kanpur Train Accident: Rajnath Singh Sends Disaster Response Teams For Rescue Ops". NDTV. http://www.ndtv.com/india-news/kanpur-train-accident-rajnath-singh-sends-disaster-response-teams-for-rescue-ops-1627704. பார்த்த நாள்: 20 November 2016. 
  6. Madan Kumar (20 November 2016). "Kanpur train derailment: Bihar CM Nitish Kumar announces ex-gratia payment for Rs 2 lakh to dead, Rs 50,000 to injured". Patna: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://m.timesofindia.com/city/patna/Kanpur-train-derailment-Bihar-CM-Nitish-Kumar-announces-ex-gratia-payment-for-Rs-2-lakh-to-dead-Rs-50000-to-injured/articleshow/55527478.cms. பார்த்த நாள்: 21 November 2016. 
  7. "Kanpur Rail Accident Survivors Get Old Notes As Compensation". Archived from the original on 2017-05-01. பார்க்கப்பட்ட நாள் 2016-11-21.
  8. "Indore Patna Express accident: MoS Railways hints at fractured track for derailment". தி இந்தியன் எக்சுபிரசு. http://indianexpress.com/article/india/india-news-india/indore-patna-express-accident-mos-railways-hints-at-fractured-track-for-derailment-4385744/. பார்த்த நாள்: 20 நவம்பர் 2016. 
  9. "Indore-Patna Express derailment: Train was carrying more passengers than its capacity". டைம்சு ஆப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/india/Indore-Patna-Express-derailment-Train-was-carrying-more-passengers-than-its-capacity/articleshow/55529907.cms. பார்த்த நாள்: 20 நவம்பர் 2016.