உள்ளடக்கத்துக்குச் செல்

புக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்சு

புக்சு (பஞ்சாபி: ਬੁਘਚੂ ) புக்சு, புக்டு அல்லது புக்காடு என்று உச்சரிக்கப்படுகிறது,இது பஞ்சாப் பகுதியினைச் சார்ந்த ஒரு பாரம்பரியமான இசைக்கருவியாகும்.[1][2] இது நாட்டுப்புற இசை மற்றும் நாட்டுப்புற நடனங்களான [3] பாங்கரா (நடனம்),மல்வாய் கித்தா போன்ற பல்வேறு கலாச்சார நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.[4][5] இது மரத்தினால் செய்யப்பட்ட ஒரு எளிய கருவியாகும், இதன் வடிவம் டம்ரு என்ற இந்திய இசைக்கருவியை ஒத்ததாகும்.[5] அதன் பெயரினை ஒத்த புக்சூ என்ற ஒலியை எழுப்புகிறது.

வடிவம் மற்றும் இசைத்தல்[தொகு]

புக்சு என்பது ஒரு மணற்கடிகாரத்தின் வடிவத்தை கொண்டது, தலைப்பகுதியில் தோலைக்கொண்டுள்ளது. தடிமனான தண்டு அல்லது சரம் (நாண்) மையத்தினை துளைப்பதாய் உள்ளது. இச்சரத்தின் மறுபக்க முனையில் மரத்தினாலான குமிழ் கட்டப்பட்டுள்ளது. கருவியானது கையின் வளைவில் மடித்து பிடிக்கப்படுகிறது கருவி இருக்கும் அதே கையினால் சரமானது மரக்குமிழுடன் பிடிக்கப்படுகிறது. பின்னர் மற்றொரு கையின் விரல்களால் ஒரு அடிப்பான் கொண்டு தனித்துவமிக்க ஒலியை ஏற்படுத்த முடிகிறது. சரத்தினை இழுக்கும்போதும் அதனை தளர்வடைய வைக்கும் போதும் சுருதி ஒலியானது கட்டுப்படுத்தப்படுகிறது, சரத்தினை இழுக்கும்போது சுருதி அதிகரிக்கின்றது சரத்தினை தளர்வடைய வைக்கும்போது சுருதி குறைகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ਅਮਰਜੀਤ ਬਬਰੀ. "ਮੈਂ ਪੰਜਾਬ ਬੋਲਦਾਂ!!". An article about old Punjab in Punjabi. www.likhari.org. Archived from the original on ஆகஸ்ட் 9, 2020. பார்க்கப்பட்ட நாள் March 17, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. ਪ੍ਰੋ. ਪ੍ਰੀਤਮ ਸਿੰਘ ਗਰੇਵਾਲ. "ਮੇਲਾ ਛਪਾਰ ਦਾ - ਛੇ ਕੁ ਦਹਾਕੇ ਪਹਿਲਾਂ". Article in Punjabi. www.punjabiportal.com. Archived from the original on November 1, 2012. பார்க்கப்பட்ட நாள் March 17, 2012.
  3. ਪੀ. ਐਸ. ਗਰੇਵਾਲ. "65ਵੇਂ ਅਜ਼ਾਦੀ ਦਿਹਾੜੇ ਦੇ ਅਵਸਰ 'ਤੇ ਖੇਤੀਬਾੜੀ ਮੰਤਰੀ ਨੇ ਕੌਮੀ ਝੰਡਾ ਲਹਿਰਾਇਆ". Article in Punjabi. www.punjabinfoline.com. Archived from the original on April 19, 2013. பார்க்கப்பட்ட நாள் March 17, 2012.
  4. "The Art of Bhangra". www.hindustanheritage.msg. Archived from the original on 2014-01-12. பார்க்கப்பட்ட நாள் 11 Mar 2012.
  5. 5.0 5.1 "Malwai Giddha". www.unp.me. பார்க்கப்பட்ட நாள் 10 Mar 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்சு&oldid=3680269" இலிருந்து மீள்விக்கப்பட்டது