புக்கோயா தங்கல்
சையது பி.எம்.எசு.ஏ.புக்கோயா தங்கல் (அகமது சிகாபுதீன் அல் ஊசைனி பா அலவி) | |
|---|---|
பி.எம்.எசு.ஏ.புக்கோயா தங்கல் | |
| பிறப்பு | 1913 |
| தேசியம் | இந்தியர் |
| பணி |
|
புக்கோயா தங்கல் (Pukkoya Thangal) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] சையத் அகமத் சிகாபுதீன் அல் -ஊசைனி பா அலவி, பி.எம்.எசு.ஏ.புக்கோயா தங்கல் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார்.[1] தெற்கு மலபார் மாவட்டத்தின் பனக்காடு கிராம புக்கோயா குடும்பத்தைச் சேர்ந்த இவர் சையது அல்லது தங்கல் இனக்குழுவின் தலைவராகவும் கேரளத்தின் இந்திய ஒன்றிய முசுலிம் லீக் கட்சி அரசியல்வாதியாகவும் இருந்தார். புக்கோயா தங்கல் 1913 ஆம் ஆண்டு சையித் ஊசைன் சிகாபுதீன் அல்-ஊசைனி பா அலவியின் மகனாகப் பிறந்தார். இந்திய ஒன்றிய முசுலிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவராகவும், சமசுத்தா கேரள இயம் இய்யத் அல்-உலாமாவின் (கேரளத்தில் உள்ள சன்னி-சாஃபி அறிஞர்களின் அமைப்பு) தலைவராகவும் பணியாற்றினார்.[2]
அகமத் சிகாபுதீன் யேமன்-அத்ராமி வம்சாவளியைச் சேர்ந்த புக்கோயா குடும்பத்தில் புக்கோயா தங்கல் பிறந்தார். இது நபிகள் நாயகத்தின் பேரனான ஊசைன் பின் அலியின் வழித்தோன்றல்களின் பா அலவி மரபில் ஒன்றாகும்.[1]
புக்கோயா தங்கலுக்குப் பிறகு இவரது மூத்த மகன் சையத் முகமது அலி சிகாப் தங்கல் (1936–2009) பதவியேற்றார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 Miller, Roland E. (2015). Mappila Muslim Culture: How a Historic Muslim Community in India Has Blended Tradition and Modernity. SUNY series in Religious Studies. State University of New York Press. pp. 115, 268–9. ISBN 978-1-4384-5602-7. Retrieved 16 November 2024.
- ↑ Miller, Roland E. (1991). "Mappila". The Encyclopedia of Islam. Vol. VI. Leiden: E. J. Brill. p. 460. ISBN 9004081127. Retrieved 16 November 2024.