புக்குஷிமா டா இச்சி அணு உலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புக்குஷிமா டா இச்சி அணு ஆலை (ஜப்பானிய மொழி: 福島第一原子力発電所, Fukushima Daiichi Nuclear Power Plant) அல்லது புக்குஷிமா I அணு ஆலை ஜப்பான் நாட்டின் புகுஷிமா மாகாணத்தில் உள்ள நாரக மற்றும் டோமியோக்கா நகரங்களுக்கிடையிலே அமைந்துள்ள அணு ஆலை. 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட 2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் மற்றும் ஆழிப்பேரலையினால் பெரும் சேதத்துக்குள்ளான நான்கு மின் நிலையங்களில் இதுவும் ஒன்று. டோக்யோ எலெக்ட்ரிக் நிறுவனத்தால் நிருவகிக்கப்பட்டும் புக்குஷிமா அணுமின் வளாகத்தில் மிக அதிகமாக சேதமடைந்த அணு ஆலை இதுவே. யாரும் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இச்சேதத்தால், புக்குஷிமா அணுக்கரு உலையின் குளிரூட்டு அமைப்புகள் செயலிழந்தன. இதனால் கதிரியக்கம் கசிந்து சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டது. அணு ஆலையைச் சுற்றி 30 கிமீ பரப்பளவுள்ள பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

வெளி இணைப்புகள்[தொகு]