புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம்
KG31 புக்கிட் டுக்குங் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
புக்கிட் டுக்குங் நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Bukit Dukung MRT Station Stesen MRT Bukit Dukung சீனம்: 武吉杜蓊 | |||||||||||||||
| அமைவிடம் | புக்கிட் டுக்குங் காஜாங் சிலாங்கூர் | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°12′23″N 101°34′49″E / 3.20639°N 101.58028°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | ||||||||||||||||
| நடைமேடை | 2 பக்க நடைமேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 தடங்கள் | |||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்மட்ட நிலையம் | |||||||||||||||
| நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலையக் குறியீடு | KG31 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | KG31 17 சூலை 2017 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Bukit Dukung MRT Station; மலாய்: Stesen MRT Bukit Dukung) என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங் பகுதியில் புக்கிட் டுக்குங், கம்போங் செலாமட் (Kampung Selamat), சுங்கை பாலாக் (Sungai Balak) போன்ற பகுதிகளுக்கு தொடருந்து சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையம்
(Cheras–Kajang Expressway) செராஸ்–காஜாங் விரைவுச்சாலை; மற்றும்
(SILK) காஜாங் பரவல் இணைப்பு விரைவுச்சாலையின் சுங்கை பாலாக் பரிமாற்றச் சாலையில் (Sungai Balak Interchange) அமைந்துள்ளது.
புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையத்தில் 360 வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் 83 விசையுந்து நிறுத்துமிடங்கள் கொண்ட மூடப்பட்ட தரிப்பிடம் உள்ளது.
காஜாங் வழித்தடம்
[தொகு]9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.
5 கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[1]
பொது
[தொகு]9 சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் - காஜாங் தொடருந்து நிலையம் வரையில் கட்டப்பட்ட 19 நிலையங்களில் புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையமும் ஒன்றாகும்; 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[2] புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இந்த நிலையம் காஜாங் பகுதியில் புக்கிட் டுக்குங், கம்போங் செலாமட், சுங்கை பாலாக் போன்ற புறநகர்ப் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.[3]
நிலைய அமைப்பு
[தொகு]இந்த நிலையம், காஜாங் எம்ஆர்டி வழிதடத்தின் பெரும்பாலான உயர்மட்ட நிலையங்களைப் போலவே (முனையம் மற்றும் நிலத்தடி நிலையங்கள் தவிர) அமைப்பையும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. மேல் தளத்தில் நடைமேடை உள்ளது.
இரட்டை வழித்தடங்களிலும் இரண்டு பக்க நடைமேடைகள் உள்ளன; மற்றும் தரை மட்டத்திற்கும் நடைமேடை மட்டத்திற்கும் இடையில் பயணச்சீட்டு வழங்கும் வசதியுடன் கூடிய ஒற்றை இணைப்புவழி வசதிகளும் உள்ளன. நிலையத்தின் அனைத்து தளநிலைகளும் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
| L2 | நடைமேடை | பக்க நடைமேடை |
| நடைமேடை 1 9 காஜாங் (→) காஜாங் தொடருந்து KG35 (→) | ||
| நடைமேடை 2 9 காஜாங் (→) குவாசா டாமன்சாரா KG04 (←) | ||
| பக்க நடைமேடை | ||
| L1 | இணைப்புவழி | கட்டண வாயில்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள், பாதசாரி மேம்பாலம் (→) நுழைவாயில் C |
| G | தரை மட்டம் | நுழைவாயில் A (→) நுழைவாயில் B (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) செராஸ் சாலை (→) புக்கிட் டுக்குங் |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையத்தில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இங்குள்ள ஊட்டி பேருந்துகள், நிலையத்தின் ஊட்டி பேருந்து (Feeder Bus) மையத்திலிருந்து நிலையத்தின் நுழைவாயில் A வழியாகச் சேவை செய்கின்றன.
| காஜாங் வழித்தட நிலையம் | |||
| நுழைவாயில் | இடம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| A | புக்கிட் டுக்குங் | ஊட்டி பேருந்து நிறுத்தம் (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்தம் (→) பெட்ரோனாஸ் புக்கிட் டுக்குங் | |
| B | செராஸ் சாலை | பேருந்து நிறுத்தம் (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்தம் (→) செராஸ் சாலை (→) சுங்கை செக்காமாட் (→) சிம்பாங் பாலாக் | |
பேருந்து சேவைகள்
[தொகு]| பேருந்து | தொடக்கம் | இலக்கு | பயணவழி |
|---|---|---|---|
| KG31 புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம் | பண்டார் சுங்கை லோங் | ||
| KG31 புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம் | சுங்கை செக்காமாட் | செராஸ் சாலை (→) சுங்கை செக்காமாட் சாலை | |
| KG31 புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம் | சுத்திரா குடியிருப்புகள் | செராஸ் சாலை (→) சிம்பாங் பாலாக் சாலை (→) செராஸ் சாலை பிரைமா 1 (→) சுத்திரா சாலை 2 |
பிற பேருந்து சேவைகள்
[தொகு]புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம் வேறு சில பேருந்து சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.
| பேருந்து | இயக்குநர் | தொடக்கம் | இலக்கு | பயணவழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
| ரேபிட் கேஎல் | காஜாங் நிறுத்தம் | லெபோ புடு முனையம் | ரேக்கோ சென்ட்ரல்; காஜாங் நகரம் KG34 காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் |
பேருந்து நிலைய நுழைவாயிலுக்கு; புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையத்தின் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்ல வேண்டும். காஜாங் பேருந்து நிறுத்தம்; செராஸ் சாலையின் குறுக்கே உள்ளது. (கோலாலம்பூர் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே). |
காட்சியகம்
[தொகு]புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம் (13 சூலை 2022)
மேலும் காண்க
[தொகு]- பிரசரானா மலேசியா
- கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
- கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
[தொகு]- எம்ஆர்டி நிறுவனம்
- கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
- 9 காஜாங் (MRT1)
- 12 புத்ராஜெயா (MRT2)
- 13 சுற்று வழித்தடம் (MRT3)
- கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy.
- ↑ "The Launch Of MRT Phase 2 Today Gets M’sians All Excited, How Will Commuters Benefit" (in en-gb). Malaysian Digest இம் மூலத்தில் இருந்து 2017-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729220121/http://www.malaysiandigest.com/frontpage/282-main-tile/686803-the-launch-of-mrt-phase-2-today-gets-m-sians-all-excited-how-will-commuters-benefit.html.
- ↑ "Najib launches Phase 2 of Sungai Buloh-Kajang MRT line" (in en). Thestar.com.my. 2017-07-17. https://www.thestar.com.my/news/nation/2017/07/17/najib-launches-phase-2-of-sungai-buloh-kajang-mrt-line/.
- ↑ "Bukit Dukung MRT Feeder Bus T453 | mrt.com.my". mrt.com.my. Retrieved 31 December 2020.
- ↑ "Bukit Dukung MRT Feeder Bus T454 | mrt.com.my". mrt.com.my. Retrieved 31 December 2020.
- ↑ "Bukit Dukung MRT Feeder Bus T455 | mrt.com.my". mrt.com.my. Retrieved 31 December 2020.
- ↑ "Line Route 450 - rapidKL Bus - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). Retrieved 31 December 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Bukit Dukung MRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
