உள்ளடக்கத்துக்குச் செல்

புக்கிட் ஜாலில் விளையாட்டுப் பள்ளி

ஆள்கூறுகள்: 3°03′03″N 101°41′39″E / 3.0508°N 101.6943°E / 3.0508; 101.6943
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் ஜாலில் விளையாட்டுப் பள்ளி
Sekolah Sukan Bukit Jalil
அமைவிடம்
57000 புக்கிட் ஜாலில், கோலாலம்பூர்,  மலேசியா
அமைவிடம்3°03′03″N 101°41′39″E / 3.0508°N 101.6943°E / 3.0508; 101.6943
தகவல்
வகைவிளையாட்டுப் பள்ளி
தொடக்கம்1996; 30 ஆண்டுகளுக்கு முன்னர் (1996)
அதிபர்அசுமத் பின் அகமத்
பால்இரு பாலர் பள்ளி
நிறங்கள்நீலம், சிவப்பு, மஞ்சள்
இணைப்புமலேசிய உயர்க் கல்வி அமைச்சு
துங்கு மக்கோத்தா இசுமாயில் பள்ளி
மலேசியா பள்ளி, பகாங்
மலேசியா பள்ளி, சபா
இணையம்

புக்கிட் ஜாலில் விளையாட்டுப் பள்ளி (ஆங்கிலம்: Bukit Jalil Sports School; மலாய்: Sekolah Sukan Bukit Jalil, (SSBJ) என்பது மலேசியாவின் முதல் விளையாட்டுப் பள்ளியாகும். இந்தப் பள்ளி கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் புறநகரில் தேசிய விளையாட்டு வளாக வளாகத்தில் அமைந்துள்ளது.

புக்கிட் ஜாலில் விளையாட்டுப் பள்ளி 1996-இல் திறக்கப்பட்டது. அந்தப் பள்ளியில் அப்போது படிவம் ஒன்று; மற்றும் படிவம் நான்கு மாணவர்கள் மட்டுமே முன்னோடி மாணவர்களாகப் பயிற்சி பெற்றனர். விளையாட்டு மற்றும் கல்வி வசதிகளுடன் கூடிய முழு உறைவிடப் பள்ளி என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பள்ளி உருவாக்கப்பட்டது.[1]

கோலாலம்பூர் விளையாட்டு நகரம்

[தொகு]

காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், தடகள விளையாட்டு மற்றும் நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மையமாக செயல்படுகிறது. இந்த வளாகத்தில் தேசிய விளையாட்டு நிறுவனம் (ISN) உள்ளது.

இது மலேசியாவின் தேசிய விளையாட்டு அணிகளுக்கு விளையாட்டு தொடர்பான அறிவியல் ஆராய்ச்சி, தடகள மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பயிற்சி வசதிகளை வழங்கி வருகிறது.[2]

மெரினா சின்

[தொகு]

முன்னாள் தடகள் வீராங்கனையும்; முன்னாள் மலேசிய விளையாட்டு வீராங்கனையுமான மெரினா சின், 2007-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "This school is entirely based on the concept of a Full Boarding School which is equipped with sports and academic facilities". www.moe.gov.my. Retrieved 4 January 2026.
  2. "Bukit Jalil Sports School Generates World Class Athletes". Facebook. Retrieved 4 January 2026.
  3. Marina Chin to head Bukit Jalil Sports School The Star (Malaysia), 27 July 2007

வெளி இணைப்புகள்

[தொகு]