புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி
| புக்கிட் காசிங் (N34) | |
|---|---|
| State Constituency in Selangor | |
| வாக்காளர்களின் எண்ணிக்கை | 54,238 (2023)[1] |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
| கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
| சட்டமன்ற உறுப்பினர் | ராஜீவ் ரிசியகரன் |
| முதல் தேர்தல் | 1986 |
| இறுதித் தேர்தல் | 2023 |
புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி (N34) (மலாய்: Bahagian Pilihan Raya Bukit Gasing; ஆங்கிலம்: Bukit Gasing State Constituency; சீனம்: 武吉加星州选区) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்தத் தொகுதி பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதியில் (P105); பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி; மற்றும் கோலாலம்பூர் மாநகராட்சியின் கீழ் அமைந்துள்ளது.
புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி, சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது ராஜீவ் ரிசியகரன் (Rajiv Rishyakaran) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். புக்கிட் காசிங் தொகுதியின் தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை: 16.9% மலாய்க்காரர்கள்; 62.1% சீனர்கள்; 17.2% இந்தியர்கள்; 3.79% பிற இனத்தவர் என பதிவாகி உள்ளது.
30 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, புக்கிட் காசிங் தொகுதி 20 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]
தொகுதி வரலாறு
[தொகு]| புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| பெட்டாலிங் ஜெயாவிலிருந்து உருவாக்கப்பட்ட தொகுதி | |||
| 7-ஆவது | 1986–1990 | தாய் சின் பியாவ் | ஜசெக |
| 8-ஆவது | 1990–1995 | தியோங் சியான் சுயான் | காகாசான் (ஜசெக) |
| 9-ஆவது | 1995–1999 | தெங் சாங் கிம் | |
| 10-ஆவது | 1999–2004 | லிம் துவாங் செங் | பாரிசான் (கெராக்கான்) |
| 11-ஆவது | 2004–2008 | ||
| 12-ஆவது | 2008–2011 | எட்வர்ட் லீ போ லின் | பாரா (ஜசெக) |
| 2011–2013 | காலி[N 1] | ||
| 13-ஆவது | 2013–2015 | ராஜீவ் ரிசியகரன் | பாரா (ஜசெக) |
| 2015–2018 | பாக்காத்தான் (ஜசெக) | ||
| 14-ஆவது | 2018–2023 | ||
| 15-ஆவது | 2023–தற்போது வரையில் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| ராஜீவ் ரிசியகரன் | பாக்காத்தான் | 28,227 | 85.87 | 3.44 ▼ | |
| நளன் தனபால்ன் | பெரிக்காத்தான் | 3,255 | 9.90 | 9.61 | |
| கல்யாண ராஜசேகரன் தியாகராஜன் | மூடா | 1,390 | 4.23 | 4.10 | |
| மொத்தம் | 32,872 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 32,872 | 99.48 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 173 | 0.52 | |||
| மொத்த வாக்குகள் | 33,045 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 54,238 | 33,045 | 17.34 ▼ | ||
| Majority | 24,972 | 73.87 | 2.59 ▼ | ||
| பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF) (in மலாய்). மலேசிய தேர்தல் ஆணையம். 2018-04-16. p. 12. Retrieved 2018-04-25.
- ↑ "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
- ↑ "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
- ↑ "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Pahang" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.
{{cite web}}: CS1 maint: date and year (link)
குறிப்புகள்
[தொகு]- ↑ Vacant from 20 December 2011 until the 2013 Malaysian general election due to the incumbent died in office. No by-election was held due to the next general election was less than a year and half away.