புக்கிட் அந்தாரா பங்சா
புக்கிட் அந்தாரா பங்சாவில் தாமான் வங்சா உக்கே | |
![]() | |
| ஆள்கூறுகள்: 3°11′11″N 101°46′13″E / 3.18639°N 101.77028°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | அம்பாங் ஜெயா |
| நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
| அஞ்சல் குறியீடு | 68000[1] |
| தொலைபேசி | +60-3-4265 |
புக்கிட் அந்தாரா பங்சா (ஆங்கிலம்; மலாய்: Bukit Antarabangsa) என்பது மலேசியா, சிலாங்கூர், அம்பாங் ஜெயா, உலு கிள்ளான் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும். பொதுவாக இந்த நகர்ப்பகுதி, பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வசிக்கும் ஒரு வசதியான குடியிருப்பு புறநகர்ப் பகுதியாக நன்கு அறியப்படுகிறது. இது பெரும் கோலாலம்பூரில் மிகவும் வளம் பெற்ற பகுதிகளில் ஒன்றாகவும் புகழப்படுகிறது.
உலு கிள்ளான் பகுதி பொதுவாக ஒரு மலைப்பாங்கான பகுதி; மற்றும் சிலாங்கூரின் நீர்ப்பிடிப்புப் பகுதியாகும். இங்கு ஏராளமான குடியிருப்பு வளாகங்கள் உள்ளன. மேலும் அந்த குடியிருப்பு வளாகங்களில் ஓரடுக்கு மனைகள் இரட்டை மொட்டை மாடி வீடுகள், கூட்டுரிமை குடியிருப்புகள் மற்றும் நடைபாதை அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை உள்ளன[2].
ஐலேண்டு கோபுர சரிவு
[தொகு]இந்தப் பகுதியின் மலைப்பாங்கான நிலப்பரப்பு; மற்றும் அடிக்கடி பெய்யும் மழையின் காரணமாக, பல நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நிலப்பரப்பின் குறைவான அசைவு இன்னும் இருப்பதாகத் தெரிகிறது, இருப்பினும் 1993-ஆம் ஆண்டு ஐலேண்டு கோபுரம் இடிந்து விழுந்த துர்நிகழ்வுக்குப் பிறகு அங்குள்ள குடியிருப்புகளுக்கு எந்தப் பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை.
இயற்கைச் சூழலின் நடுவே அமைந்துள்ள அதன் சுற்றுச்சூழல் காரணமாக இந்தப் பகுதி பிரபலமாக உள்ளது. அத்துடன் பல பகுதிகள் எளிதாக அணுகக்கூடிய நிலையில் உள்ளன. அந்த வகையில் தாமான் மெலாவத்தி, செத்தியாவங்சா, யூகே அயிட்ஸ், தித்திவங்சா போன்றவை அருகிலுள்ள பகுதிகள் ஆகும்.
அருகாமை நகரங்கள்
[தொகு]- தாமான் ஆக்லீப்
- தாமான் மெலாவத்தி
- தாமான் புக்கிட் மூலியா
- தாமான் புக்கிட் உத்தாமா
- தாமான் புக்கிட் ஜெயா
- தாமான் வாங்சா யூகே
- புஞ்சாக் புக்கிட் உத்தாமா
- ரிவர்டேல் பூங்கா
- கம்போங் சுங்கை சேரிங்
- தாமான் ரியானா யூகே
- தாமான் கிளப் யூகே
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bukit Antarabangsa, Ampang - Postcode - 68000 - Malaysia Postcode". postcode.my. Retrieved 25 September 2025.
- ↑ "Bukit Antarabangsa Local Property & Real Estate Trends, News & Guides | PropertyGuru Malaysia". www.propertyguru.com.my. Retrieved 25 September 2025.
