புகோவ்சுகியைட்டு
| புகோவ்சுகியைட்டு Bukovskyite | |
|---|---|
திராட்சைக் கொத்து போன்ற வெண் திரட்டு | |
| பொதுவானாவை | |
| வகை | ஆர்சனேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | Fe2(AsO4)(SO4)(OH)·7H2O |
| இனங்காணல் | |
| படிக அமைப்பு | முச்சாய்வு அறியப்படாத இடக்குழு |
புகோவ்சுகியைட்டு (Bukovskyite) என்பது Fe2(AsO4)(SO4)(OH)·7H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சிறுநீரக வடிவ மேற்பரப்புடன் கூடிய முடிச்சுகளுடன் உருவாகிறது. நுண்ணோக்கியில், இந்த முடிச்சுகள் சிப்சம் போன்ற சிறிய ஊசிகளின் தொகுப்பாகத் தோன்றும். சிலவற்றை சாதாரணக் கண்ணால் காணலாம்.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் புகோவ்சுகியைட்டு கனிமத்தை Buk[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
செக் குடியரசின் போகேமியாவில் உள்ள குட்னா ஓராவின் வடக்கே உள்ள காங்கு மற்றும் அருகிலுள்ள பிற பழைய படிவுகளில் சல்பேட்டு தாதுக்கள் வெட்டப்பட்ட இடைக்கால குழி குவியல்களிலிருந்து புகோவ்சுகியைட்டு கனிமம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. சமீபத்தில் வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட இக்கனிமம் 1969 ஆம் ஆண்டு பன்னாட்டு கனிமவியல் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
குட்னா ஓராவில் வசிப்பவர்களால் புகோவ்சுகியைட்டு கனிமம் நீண்ட காலத்திற்கு முன்பு அதிகமாக வளர்ந்த குழி குவியல்களிலிருந்து சேகரிக்கப்பட்டது. இது வயல் எலிகள் மற்றும் பிற வயல் பூச்சிகளை கொல்ல நச்சாகப் பயன்படுத்தப்பட்டது. குட்னா ஓராவின் களிமண் என்றும் அழைக்கப்படும் இந்த நச்சு களிமண் பரவலாக அறியப்பட்டிருந்தது. மேலும் இது ஆர்சனிக் மூவாக்சைடு சேர்மம் என்று கருதப்பட்டது. 1901 ஆம் ஆண்டில், பழைய குழி குவியல்களின் கனிமங்களை ஆய்வு செய்த செக் குடியரைச் சேர்ந்த வேதியியலாளர் அண்டோனின் புகோவ்சுகி (1865–1950), இது ஒரு ஆர்சனேட்டு என்பதை நிரூபித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.