புகு ஏற்பளவும் வெளிப்படு ஏற்பளவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புகு ஏற்பளவும் வெளிப்படு ஏற்பளவும் (entrance dose and exit dose) தொலை கதிர் மருத்துவத்தின் போது எக்சு அல்லது காமாக் கதிர்கள், உடலின் புறப்பரப்பில் விழுந்து உட்சென்று புற்று உயிரணுக்களுக்குத் திட்டமிட்ட அளவு ஏற்பளவினைக் கொடுத்து, பின் மறுபக்கம் வெளிப்படுகிறது. கதிர்கள் உட்புகும் பரப்பிலுள்ள கதிர் ஏற்பளவு, புகு ஏற்பளவு என்றும், கதிர்கள் வெளிப்படும் பரப்பிலுள்ள கதிர்ஏற்பளவு, வெளிப்படு ஏற்பளவு என்றும் அறியப்படும். புற்று உயிரணுக்கள் பெறும் அளவு, கதிர் ஏற்பளவு ஆகும்.