புகுசிமா ஐதரசன் ஆற்றல் ஆராய்ச்சி மையம்
புகுசிமா ஐதரசன் ஆற்றல் ஆராய்ச்சி மையம் (Fukushima Hydrogen Energy Research Field) என்பது புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி ஐதரசன் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய ஐதரசன் உற்பத்தி நிலையமாகும். சப்பான் நாட்டின் புகுசிமா மாகாணத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளது. கட்டுமானம் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2020 ஆம் ஆண்டில் சப்பான் பிரதமர் சின்சோ அபேவால் திறந்து வைக்கப்பட்டது.[1][2]
சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி ஐதரசனை தயாரிப்பதும் ஐதரசன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, கார்பன் உமிழ்வை குறைப்பதும் இந்நிலையத்தின் நோக்கங்களாகும்.
புகுசிமா ஐதரசன் ஆற்றல் ஆராய்ச்சி மையம் 10 மெகாவாட் சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. உற்பத்தி நிலையத்திற்கு அருகில் இவ்வசதி நிறுவப்பட்டுள்ளது. இம்மின்சாரத்தைப் பயன்படுத்தி மணிக்கு 1,200 சாதாரண கனமீட்டர் ஐதரசனை உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆராய்ச்சி மையம் புதிய எரிசக்தி மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்பு, தோசிபா எரிசக்தி அமைப்புகள் & தீர்வுகள் கழகம், தோகோகு எலக்ட்ரிக் பவர் மற்றும் இவதானி கார்ப்பரேசன் ஆகிய நிறுவனங்களால் கூட்டாக நிறுவப்பட்டது.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fukushima powers up one of world's biggest hydrogen plants". Nikkei Asia. Retrieved 2022-10-24.
- ↑ "The world´s largest-class hydrogen production, Fukushima Hydrogen Energy Research Field (FH2R) now is completed at Namie town in Fukushima". 2020-03-07. Retrieved 2025-08-09.
- ↑ "The world's largest-class hydrogen production, Fukushima Hydrogen Energy Research Field (FH2R) now is completed at Namie town in Fukushima". Retrieved 2022-10-24.
- ↑ "Fukushima Hydrogen Energy Research Field in Japan ready for green hydrogen production". Fuel Cells Bulletin 2020 (3): 1. 2020-03-01. doi:10.1016/S1464-2859(20)30089-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1464-2859. https://www.sciencedirect.com/science/article/pii/S1464285920300894. பார்த்த நாள்: 2022-10-24.
- ↑ "The World's Largest Hydrogen-Production Facility on the Path to Zero Emissions". The Government of Japan - JapanGov -. Retrieved 2022-10-24.